பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் என தெரியவந்துள்ளது.

BB Ultimate 4th Eviction Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய முடிந்த நிலையில் இந்த ஐந்து சீசன்கள் பங்கேற்ற போட்டியாளர்களில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களை தேர்வு செய்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகிறது.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி, அபிநய், சுஜா வருணி, ஷாரிக், வனிதா விஜயகுமார் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இவர்களில் சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும் இந்த வாரம் ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக லாஸ்லியா உள்ளே செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இப்படியான நிலையில் தற்போது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

நாமினேஷனில் உள்ளவர்களில் சுருதி மிக குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பதால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.