BB Gabriella Positive With Covid19

விஜய் டிவியில் பங்கேற்ற பிக் பாஸ் பிரபலம் ஒருவருக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

BB Gabriella Positive With Covid19 : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் தீயாக பரவிவரும் இதன் இரண்டாவது அலை பெரும் பாதிப்பையும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தொற்றால் தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொஞ்சம் வயதான பிரபலங்கள் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து வரும் சோகம் செய்தியும் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் டிவி பிரபலம் கேபிக்கும் கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.

தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருங்கள். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரானா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.