BB Cheran Saravanan Fight : kamal Haasan, Reshma, Mugen Rao, Sandy, Sherin, Saravanan, Abhirami, Kavin, Madhumitha, Sakshi Agarwal, Losliya
பழையதை மனதில் வைத்து வாய்ப்பு கிடைத்ததும் சேரனை பழி தீர்த்து கொண்டுள்ளார் சரவணன். இது பற்றி அவரே மற்ற போட்டியாளர்களிடம் கூறியுள்ளார்.

BB Cheran Saravanan Fight : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில் நேற்று சேரனுக்கும் சரவணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சேரன் சாதாரணமாக சொன்ன வார்த்தைகளை பிடித்து கொண்டு சரவணன் அவரை வாடா போடா, லூசு என மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசி இருந்தார். பிக் பாஸ் போட்டியாளர்கள் அவரை சமாதனப்படுத்தியும் அவர் அடங்க மறுத்தார்.

பிகில் என்ற ஒத்த வார்த்தையால் அதிர்ந்து போன அரங்கம் – வைரலாகும் வீடியோ.!

அதன் பின்னர் சரவணன் ஒரு சில போட்டியாளர்களிடம் நான் நடிகராக நடித்து கொண்டிருந்த போது சேரன் உதவி இயக்குநராக ஆஃபிஸில் உக்கார்ந்து கொண்டிருப்பார்.

அதன் பின்னர் அவர் வளர்ந்து பெரிய இயக்குநராகி விட்டார் அப்போது நான் அவரிடம் வாய்ப்பு கேட்ட போது நீங்க எப்பேர்ப்பட்ட இயக்குனர் படத்துல எல்லாம் நடித்து விட்டீர்கள்.. என் கிட்ட வாய்ப்பு கேட்கறீங்க என பேசினார்.

அன்று அவர் பேசியது எனக்கு எவ்வளவு வருத்தத்தை கொடுத்தது என்று எனக்கு தான் தெரியும் என பேசியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.