Bavana Tweet

Bavana Tweet : அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறேன் என்ற பெயரில் பாவனா ட்வீட் செய்து ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித்தின் பிறந்த நாள் என்பதால் இன்று சமூக வளையதளங்களில் அதிகம் அவரை பற்றிய பேச்சு தான்.

திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில் தொகுப்பாளி பாவனாவும் அஜித்துக்கு வாழ்த்து சொல்லி ட்வீட் போட்டுள்ளார்.

அதோடு நிறுத்தாமல் அதே டீவீட்டில் சென்னையில் தல தோனி ஆடும் கடைசி மேட்ச் இன்று என குறிப்பிட்டு அவரையும் தல என குறிப்பிட்டு வாழ்த்து சொல்லியுள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் ஒரே தல தான் அது அஜித் தான்.. தோனியை தலனு சொல்லாதீங்க கடுப்பாகுது என அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

சிலரோ அஜித்துக்கு வாழ்த்து சொன்னதோடு விடாம எதுக்கு இந்த வேண்டாத வேலை எனவும் பரிதப்பட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.