Barcode medicines
Barcode medicines

Barcode Medicines – டெல்லி: வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து மருந்து, மாத்திரைகளுக்கும் பார்கோடு அச்சிடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், பார்கோடில் மருந்து பெயர், தயாரிப்பாளர், சந்தை விலை, தயாரிப்பு, காலாவதி தேதிகள் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘ஒரு பொருள், எப்போது, எங்கு தயாரிக்கப்பட்டது என்பது போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள, பார்கோடு தொழில்நுட்பம் அனைத்து பொருட்களிலும் தற்போது உதவுகிறது’ .

இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன், நைஜீரியாவில் இறக்குமதியான போலி மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரையுடன் வந்தது., அதை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டன.

சீனாவில் தயாரிக்கப்படும் இத்தகைய தரக்குறைவான மருந்துகள், இந்தியாவில் தயாரானவை என்று கூறி, நைஜீரியாவில் அதிக விலைக்கு விற்கப்படுவது, மத்திய அரசு கண்டுபிடித்தது.

இதையடுத்து, இந்தியாவில் பயன்படுத்தப்படும் மற்றும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் அனைத்து மருந்துகளுக்கும் பார்கோடு குறியீடு அவசியம் என, மத்திய அரசு உத்தரவிட்டது.

இதன் மூலம், “போலி மருந்துகளை அடையாளம் காணவும், தரமான இந்திய மருந்துகளின் சிறப்பு சீர்கெடாமல் இருக்கவும் வழி ஏற்பட்டுள்ளது!! “.

இந்நிலையில், இந்தியாவில் வரும் ‘ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து மருந்து, மாத்திரைகளுக்கும் பார்கோடு அச்சிடப்பட வேண்டும் என்றும், பார்கோடில் மருந்து பெயர், தயாரிப்பாளர், சந்தை விலை, தயாரிப்பு, காலாவதி தேதிகள் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும்’ என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here