Bandh in Puducherry
Bandh in Puducherry

Bandh in Puducherry – புதுச்சேரி: “சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சபரிமலை பக்தர்களுக்கு கேரள அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதை கண்டித்து, புதுச்சேரியில முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்” என்று ஏற்கனவே மாநில பாஜக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த பந்த் காரணமாக, தனியார் பஸ்கள் , மற்றும் ஒரு சில ஆடோக்கள் இயங்கவில்லை. மேலும் எவ்வித அசம்பாவிதங்களை ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளது,

ஆனாலும், அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படுகின்றன. இந்நிலையில் புதுச்சேரி பேருந்து நிலையம் வழக்கம் போல இயங்கி வருகிறது.

ஆனால் தனியார் பேருந்துகள் இயங்காததால், கிராமபுற பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்காக அரசு பஸ்கள் கிராமப்புற செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பேருந்துகளில் கல் வீச்சு போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த பந்த் போராட்டத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க இன்று காலை 6 மணி முதல் புதுச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இருப்பினும், அதற்கு முன்னதாக ‘லாஸ்பேட்டை பகுதியில் தமிழக அரசு பேருந்து கண்ணாடியும் மற்றும் கிராமப்புற பகுதியில் உள்ள ஒரு தனியார் பேருந்து கண்ணாடியும் கல் வீசி உடைக்கபட்டுள்ளது’ .

உடனடியாக பஸ் கண்ணாடிகளை உடைத்த 4 பாஜகவினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .