Banana Categories
Banana Categories

Banana Categories

பழங்களிலேயே மிக அதிக வகைகளைக் கொண்டது வாழைப்பழம் மட்டும்தான்.

☆ செவ்வாழை:
சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணத்தைத் தருகிறது.

சிறுநீரகத்தில் கல், பல் வலி,மலச்சிக்கல்,
மாலைக்கண் நோய், கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். .

☆ ரஸ்தாளி:
உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
உடல் சோர்வு நீங்கும். தூக்கமின்மை, மன அழுத்த பிரச்னை சரியாகும். உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

☆ கற்பூரவள்ளி:
நரம்புகளுக்கு வலுவினைத் தரும். இது உடலுக்கு தேவையான ஜீரன சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் சூட்டைத் தணிக்க வல்லது. உடலுக்கு உடனடி எனர்ஜி டானிக்காக விளங்குகிறது. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

☆ பூவன் பழம்:
மூல நோய்களுக்கு உகந்தது. ஆர்த்ரைட்டிஸ் உள்ளவர்களுக்கு பலன் தரக்கூடியது. பித்தம் உள்ளவர்கள் உட்கொள்வதும் நல்லது.

☆ பச்சைப்பழம்:
பச்சைப்பழம் குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. இதயத்துக்கு வலு கூட்டுகிறது. உடல் எடையை குறைக்கச் செய்கிறது. பித்த நோய் குணமாகும்.

☆ நேந்திர பழம்:
இதயத் துடிப்புக்கு நல்லது. கெட்ட கொழுப்பை குறைக்கும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தி செரிமானத்தை அதிகரிக்கும். நல்ல தூக்கத்தை கொடுக்கும்

☆ மொந்தன் பழம்:
இது மூலம் மற்றும் அனீமியாவுக்கு நல்லது. குடல் புண்களைக் கட்டுப்படுத்தும். மாதவிடாய்க்கு நல்லது. அல்சர் நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடலாம்.

☆ ஏலக்கி
இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, இது தசைக்கு நல்லது, மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து.

☆ பேயன் பழம்:
புகைப்பிடிப்பதை நிறுத்த உதவியாக இருக்கிறது. மன அழுத்தத்தைப் போக்கி புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

☆ மட்டி பழம்:
சிறுநீரகப் பிரச்னைகளை சரி செய்யும். இரைப்பை மற்றும் குடல் கோளாறு உள்ளவர்கள் மற்றும் நாள்பட்ட அல்சர் பிரச்னைஉள்ளவர்கள் இந்த மட்டி வாழைப்பழத்தினை தொடர்ந்து சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here