Balidan badge | Dhoni Keep The Glove | mahendra singh dhoni | Indian Team | BCCI | Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match

Balidan Badge :

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விளையாடுகையில்,

இந்திய அணியின் சீனியர் வீரரான தோனி ராணுவ முத்திரை பதித்த விக்கெட் கீப்பிங் கையுறையுடன் விளையாடியது டெலிவி‌‌ஷனில் ஒளிபரப்பானதை தொடர்ந்து அவருக்கு பாராட்டும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது.

இந்திய ராணுவத்தில் கவுரவ பதவி வகிக்கும் டோனி துணை ராணுவ சிறப்பு படையினரின் பாலிதான் (தியாகத்தை குறிக்கும் அடையாளம்) என்ற முத்திரையை தனது கையுறையில் (குளோவ்ஸ்) பதித்து இருந்தார்.

எனவே ராணுவ முத்திரையை அடுத்த ஆட்டத்துக்குள் தோனி அகற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தது.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி !!! .

டோனி விக்கெட் கீப்பிங் கையுறையில் பதித்துள்ள முத்திரையுடன் உலக கோப்பை போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே நாங்கள் முறைப்படி ஐ.சி.சி.க்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம்.

ஐ.சி.சி. விதிமுறைப்படி வீரர்கள் தனிப்பட்ட வர்த்தகம், மதம் மற்றும் இனம் சார்ந்த லோகாவை தான் பயன்படுத்தக்கூடாது. ஆனால் தோனி பயன்படுத்துவது அது சார்ந்தது இல்லை என்பது எங்களுக்கு தெரியும்.

முத்திரையை அகற்ற வேண்டும் என்று ஐ.சி.சி. எங்களுக்கு வேண்டுகோள் தான் விடுத்து இருக்கிறது. அதே சமயம் பாகிஸ்தான் மந்திரி பவாத் சவுத்ரி டோனிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடன் பிரச்சனைகள் தீர எவ்வாறு குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா?

அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘கிரிக்கெட் விளையாட தான் தோனி இங்கிலாந்து சென்றுள்ளார். அவர் ஒன்றும் மகாபாரத போருக்கு போகவில்லை.

இந்த வி‌‌ஷயத்தை இந்திய மீடியாக்கள் முட்டாள்தனமாக விவாதித்து கொண்டு இருக்கின்றன.

போரை பற்றி கவலைப்படும் சில இந்திய ஊடகங்கள் தோனியை ராணுவ வீரராக்கி அவரை சிரியா, ஆப்கானிஸ்தான் அல்லது ரவன்டாவுக்கு அனுப்பி வையுங்கள்’ என்று சாடியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.