Balaji Murugadoss Wishes to Aari

பிக்பாஸ் ஆரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பாலாஜி முருகதாஸ்.

Balaji Murugadoss Wishes to Aari : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முடிந்த நிலையில் வின்னராக ஆரி, ரன்னர் ஆக பாலாஜி முருகதாஸ் இடம் பெற்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இருவருக்கும் பல சண்டைகளும் விவாதங்களும் நிறையவே காணப்பட்டது. இருப்பினும் இறுதியில் சகோதரர்களாக ஒன்று சேர்ந்து இருந்தனர்.

இப்படியான நிலையில் இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பாலாஜி முருகதாஸ்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்ட்னர் என்றும் இனி வாழ்க்கையில் வெற்றியை மட்டுமே காண வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

பாலாஜி முருகதாஸின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது மட்டுமில்லாமல் ஆரி ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.