Balaji Murugadoss Kind Request To Sanam Shetty In Bigg Boss House

YouTube video

Oru Manam Song Record in Dhruva Natchathiram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், அதை நான் உமக்கு இயக்கத்தில் கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் மகாவீர் கர்ணன் என்ற பிரமாண்ட படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவரும் கௌதம் மேனன் இணைந்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இருந்து வருகிறது.

இந்த படத்தில் இருந்து கடந்த அக்டோபர் எட்டாம் தேதி ஒரு மனம் என்ற பாடல் லிரிக் விடியோ வெளியாகியுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்த பாடல் லிரிக் வீடியோ 48 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

யூட்யூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. இதனால் சியான் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.