Bala Saravanan Sister Husband Passes Away

நடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்துள்ள மரணம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Bala Saravanan Sister Husband Passes Away : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பால சரவணன்.

அதன் பின்னர் வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது கொரோனா வைரஸ் தொற்று பல பிரபலங்களின் உயிரை காவு வாங்கி வரும் நிலையில் பல சரவணன் வீட்டில் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது.

பாலசரவணன் சகோதரியின் கணவர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது அவருக்கு 32 வயது தான் ஆகிறது என்பது தான் பெரும் சோகம். இதுகுறித்து பால சரவணன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அன்பு நண்பர்களே…இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார். 32வயது,
தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்…நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்…நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்…முக கவசம் அணிவீ்ர் ப்ளீஸ் என கேட்டுக்கொண்டுள்ளார்.