தங்கையின் கணவர் இறந்த சோகம் மறைவதற்குள் பாலசரவணன் வீட்டில் நடந்த மற்றொரு துயரம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Bala Saravanan Father Passes Away : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து பிரபலமானவர் பால சரவணன். அதன் பின்னர் இவர் வெள்ளித்திரையில் திருடன் போலீஸ், டார்லிங், ஒரு நாள் ஒரு கூத்து, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஈஸ்வரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

கடந்த மாதம் இவருடைய தங்கையின் கணவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சோகம் மறைவதற்குள் பாலசரவணன் தந்தை மரணம் அடைந்துள்ளார்.

இவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளது திரையுலகினர் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.