Bala Next Movie Updates : He has acted in a small role in Varma | Arya | Atharvaa | Kollywood | Tamil Cinema | Bala Movie

Bala Next Movie Updates :

தனது ஆஸ்தான நடிகர் கேட்டுக்கொண்டதற்காக ரீமேக் படத்தை இயக்க சம்மதித்தார் பாலா. ஆனால் அதுவே அவருக்கு கடைசியில் பிரச்சனையாக வந்து முடிந்தது.

ஒருவழியாக அந்த சர்ச்சையில் இருந்து பாலா தற்போது மீண்டு வந்துவிட்டார்.
இதைதொடர்ந்து ஒரு மிரட்டலான படத்துடன் களமிறங்க வேண்டும் என திட்டமிட்ட பாலா,

அதற்காக சூர்யாவுடன் பேசி வருவதாக நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். ஆனால் சூர்யா தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் அதற்கு முன்பாகவே வேறொரு படத்தை துவங்க பாலா திட்டமிட்டுள்ளாராம்.

சூர்யா – சிவா படத்தின் நாயகி இவர்தான் – வெளிவந்த ஆச்சரியத் தகவல் இதோ!

இதில் ஆர்யா மற்றும் அதர்வா நாயகர்களாக நடிப்பார்கள் என்றும் ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்தின் நாயகியாக ரைஸா நடிப்பாராம்.

ஏற்கனவே வர்மா படத்தில் இவர் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பரதேசி, நாச்சியார் படங்களில் பாலாவுடன் பணியாற்றிய ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.