Bala and Shivangi in Vijay TV Serial

பிரபல சீரியலில் குக்கு வித் கோமாளி சிவாங்கி, பாலா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் இணைந்துள்ளனர்.

Bala and Shivangi in Vijay TV Serial : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தற்போது இந்த சீரியலின் ராஜா-ராணி-சீரியல் இணைந்து மகா சங்கமம் எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இதே 2 சீரியல் குடும்பத்தினரும் போட்டிகளில் கலந்து கொள்வது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

ஏற்கனவே நடுவர்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரியோ, சம்யுக்தா மற்றும் சோம் சேகர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது ஸ்பெஷல் கெஸ்ட்டாக பாலா, ஷிவாங்கி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இவர்கள் ராஜா ராணி மற்றும் பாரதிகண்ணம்மா டீமுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
Attachments area