ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் கோபி அதிர்ச்சியாக ராதிகாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாக்யா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா கோபியை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுத்த நிலையில் கோபி நடுரோட்டிற்கு வந்து ராதிகா காலில் விழுந்து கிடந்த அக்கம்பக்கத்தினர் உட்பட பாக்யாவின் குடும்பமும் இதை வேடிக்கை பார்க்க கோபி அதிர்ச்சி அடைந்தார்.

இவ்வாறாக நேற்றைய எபிசோட் முடிவடைந்துள்ள நிலையில் படித்து நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இது குறித்த வீடியோவில் ஈஸ்வரி கோபியை கோவிலில் சந்தித்து நீ எங்க கூட இருந்த வரைக்கும் நல்லா தானே இருந்த, இப்போ என்ன ஆச்சு என கேட்டு நீ ராதிகாவை விட்டுட்டு நம்ம வீட்டுக்கு வந்துடு என சொல்கிறார். இதைக் கேட்ட கோபி அதிர்ச்சியாக மறுபக்கம் மறைந்திருந்து இதை பார்த்த ராதிகாவும் அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்து ஆபீஸ் வரும் ராதிகா பாக்யாவை அழைத்து என்ன உங்க மாமியாரை கோபியை திரும்பவும் வீட்டுக்கு கூப்பிடுறாங்க நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம் என்று முடிவு பண்ணிட்டீங்களா? கோபி இல்லாம இருக்க முடியலையா என கேட்க பாக்யா நான் வேண்டான்னு தூக்கி போட்ட வாழ்க்கையைத்தான் நீங்க வாழ்ந்துட்டு இருக்கீங்க என பதிலடி கொடுக்கிறார்.