வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகாது என கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது.

வாரிசு பொங்கல் ரிலீஸ் இல்லை.. இந்த தேதியில் தான் ரிலீஸ் ஆகும்?? புது குண்டை போட்ட சர்ச்சை நடிகர்.!!

எஸ் தமன் படத்துக்கு இசையமைக்க தில் ராஜு தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தெலுங்குவின் இந்த படத்திற்கு வெறும் 35 சதவீத தியேட்டர்கள் மட்டுமே தான் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

வாரிசு பொங்கல் ரிலீஸ் இல்லை.. இந்த தேதியில் தான் ரிலீஸ் ஆகும்?? புது குண்டை போட்ட சர்ச்சை நடிகர்.!!

இப்படியான நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில் வாரிசு பொங்கலுக்கு வெளியாகாது. அதற்கு மாறாக குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும். அதற்குத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் உதயநிதி சந்தோஷமாக இருப்பார் என பேசி உள்ளார். பயில்வான் ரங்கநாதனின் இந்த பேட்டி விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.