இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் பாட்ஷா 2வில் நடிகர் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அல்டிமேட் ஸ்டாராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து தல அஜித் குமார் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இது தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில் நடிகர் ரஜினியின் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த பாட்ஷா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, 1995 ஆண்டு நடிகர் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான பாட்ஷா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது.

இப்படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் விஷ்ணுவர்தன் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக இப்படத்தை தயாரிக்க பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அஜித் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பான உறுதியான தகவல்கள் விரைவில் எதிர்பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.