Badminton World Championships PV Sindhu
Badminton World Championships PV Sindhu

Badminton World Championships PV Sindhu – உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றி பெற்றார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, சீனதைபேயின் பை யூ போ மோதினர்.

ஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடரில் சாய் பிரனீத் 2வது சுற்றுக்கு முன்னேறினார்!

முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டை 21-15 என தன்வசப்படுத்தினார்.

மொத்தம் 43 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சிந்து 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் – தங்க வேட்டையில் யாருக்கும் இடம் அளிக்காத இந்திய வீரர்கள் !

பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மேகனா, பூர்விஷா ராம் ஜோடி 8-21, 18-21 என, ஜப்பானின் ஷிஹோ டனாகா, கோஹரு யோனேமோடோ ஜோடியிடம் தோல்வியடைந்தது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மானு அட்ரி, சுமீத் ரெட்டி ஜோடி 16-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஹான் செங் கெய், ஜோ ஹயோ டாங் ஜோடியிடம் வீழ்ந்தது.