Badminton Star Jerlin :Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, TNPL Match 2019, Pro KabaddiLeague

Badminton Star Jerlin :

சீனாவில் நடைபெற்ற சர்வதேச பேட்மின்டன் தொடரின் மகளிர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளார். மதுரையை சேர்ந்தவர் ஜெயரட்சகன்.

இவருடைய மகள் ஜெர்லின் அனிஹா (16) மாற்றுத்திறனாளி. ஜெர்லினால் வாய் பேச முடியாது மற்றும் காது கேட்காது.

ஆனாலும் சிறுவயதில் இருந்தே பேட்மின்டன் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டிவந்தார்.

பரியேறும் பெருமாள் இயக்குனரை பாராட்டிய மாபெரும் முன்னணி பிரபலங்கள்.!

சீனாவில் கடந்தவாரம் சர்வதேச அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மின்டன் போட்டி நடந்தது. அதில் இந்தியாவின் சார்பில் களமிறங்கிய ஜெர்லின் சிறப்பாக விளையாடி 1 தங்கம். 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை குவித்தார்.

சீனாவில் இருந்து சென்னை திரும்பிய ஜெர்லினுக்கு விமான நிலையத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது ஜெர்லின் வாய் பேச முடியவில்லை என்றாலும் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி அனைவருக்கும் நன்றிதெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here