சூப்பர் சிங்கரில் பின்னணி பாடகியாக திகழ்ந்த பிரியங்காவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் விஜய் டிவி. இதில் ஆரம்பத்திலிருந்து தற்போதுவரை நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பாடகர்கள் உருவாகியுள்ளனர். இதில் சிலர் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகவும் திகழ்ந்து வருகின்றனர். 

அப்படி தனது பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை உருவாக்கியவர் தான் பின்னணி பாடகி பிரியங்கா. இவர் பாடிய ‘சின்ன சின்ன வண்ணக்குயில்’ பாடல் ரசிகர்களின் மத்தியில் வைரல் ஆனது. இவர் நல்ல பாடகியாக மட்டுமில்லாமல் சிறந்த மருத்துவராகவும் தனது பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் பாடும் பாடல்களையும், தனது புகைப்படங்களையும் வெளியிட்டுக் கொண்டிருப்பார். அந்த வகையில் தற்போது சினிமா ஹீரோயின்கள் போல் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.