Baby Shower Function in YogiBabu Home

தன்னுடைய பிறந்த நாளில் மகனுக்கு பெயர் சூட்டியுள்ளார் நடிகர் யோகி பாபு.

Baby Shower Function in YogiBabu Home : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தொடர்ந்து அஜித் விஜய் ரஜினி சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்னர் இவருக்கும் பார்கவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கோவிலில் சிம்பிளாக திருமணம் நடைபெற்றது தொடர்ந்து பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் குரோனா காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

சங்கரன் கோவில் ஆடித்தபசு : இன்று நேரலை ஒளிபரப்பு

இதனையடுத்து பார்க்கவி கர்ப்பமானார். வளைகாப்பு நிகழ்ச்சி யாவது பிரமாண்டமாக நடத்த வேண்டும் என திட்டமிட்டார் யோகிபாபு. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே குழந்தையை பெற்றெடுத்தார் பார்க்கவி. அழகிய ஆண் குழந்தைக்கு அப்பாவானார் யோகி பாபு.

Suriya-வை பிடிக்காத ஆளே இல்ல.., அவரு எங்களோட அண்ணன் – கொண்டாட்டத்தில் ரசிர்கர்கள்..! | HBD Suriya HD

நேற்று யோகி பாபு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தன்னுடைய மகனுக்கு பெயர் சூட்டியுள்ளார். தீவிர முருக பக்தர் என்பதால் மகனுக்கு விஷாகன் என பெயர் வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.