Baby Sara Turn as Hero
Baby Sara Turn as Hero

Baby Sara Turn as Hero : தெய்வத்திருமகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பேபி சாரா. இப்போ வளர்ந்து இளம் நடிகையாக பிரபல இயக்குனர் மணிரத்னம் படமான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் இளம் நடிகையாக நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் தமிழ் சினிமா பிரபலங்களான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், திரிஷா உட்பட ஹிந்தி தெலுங்கு பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கொரோனா தாக்கத்தால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்தப் படத்தின் சுவாரஸ்யமான செய்திகள் பலவும் வெளியாகி வரும் நிலையில் தற்பொழுது பேபி சாரா ஐஸ்வர்யா ராயின் குழந்தைப்பருவ காட்சியில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.