Baby Sara
தெய்வ திருமகள் சாராவிடம் நீங்க சிங்கிளா? கமிட்டடா? என கேட்ட நபருக்கு அவர் வித்தியாசமான பதிலை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சீயான் விக்ரம் நடிப்பில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் தெய்வ திருமகள்.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் பேபி சாரா. இவர் இறுதியாக சைவம் என்ற படத்தில் நடித்திருந்தார், தற்போது சாரா ஓரளவிற்கு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டார்.

இவர் சமீபத்தில் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடிய போது சின்ன பொண்ணு என்றும் பாராமல் ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா? கமிட்டடா? என கேட்டுள்ளார்.

அதற்கு சாரா பீச்சில் ஒற்றை காலடி உள்ள போட்டோவை வெளியிட்டு சிங்கிள் தான் என பதிலளித்துள்ளார். சாராவின் இந்த வித்தியாசமான பதில் பலரையும் பாராட்ட வைத்துள்ளது.

Baby Sara

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.