தளபதி விஜயின் “வாரிசு” படத்தை  தயாரிக்கும்  பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு அவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Baby born to the famous producer:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான “பிஸ்ட்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அப்பாவாகி இருக்கும் "வாரிசு" படத்தின் தயாரிப்பாளர் - வெளியான புகைப்படம்.

இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க மேலும் பிரபல முன்னணி நட்சத்திரங்களான சரத்குமார், ஷியாம், யோகி பாபு போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தமிழ் தெலுங்கு என்று இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

அப்பாவாகி இருக்கும் "வாரிசு" படத்தின் தயாரிப்பாளர் - வெளியான புகைப்படம்.

இந்நிலையில் இப்படத்தை தயாரித்து வரும் பிரபல முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு அவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட தயாரிப்பாளர் தில் ராஜுவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அப்பாவாகி இருக்கும் "வாரிசு" படத்தின் தயாரிப்பாளர் - வெளியான புகைப்படம்.