புத்திர பாக்கியம்

புத்திர பாக்கியம் பெற பரிகாரங்கள்:

1. ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் கால பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வர புத்திர பாக்கியம் கிட்டும்.

2. வியாழக்கிழமை ஒருவேளை விரதம் இருந்து, மாலையில் ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு, நெய்
தீபம் தொடர்ந்து ஏற்றி வர, ஆறு மாதத்திற்கு மேல் கருத்தரிப்பு ஏற்படும்.

3. ஸ்ரீ முஷ்ணம் பூவராக மூர்த்தி, பூதேவியுடன் எழுந்தருளியுள்ள சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட, கடுமையான புத்திர தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் கிடைக்கும்.

4. திங்கட்கிழமையில் வரும் அமாவாசை அமாசோமவாரம் ஆகும். அன்று மரங்களில் சிறந்ததாக கருதப்படும் அரசமரத்தை, அபிஷேகம் செய்து, அலங்கரித்து, பூஜை செய்து,
108 முறை வலம் வர, புத்திர பாக்கியம் கிட்டும்.

5. ராமேஸ்வரம் திருத்தலத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் குளித்து, ராமநாதசுவாமி வழிபாடு செய்தால் புத்திர தோஷம் நீங்கும்.

6. நவதானியம் ஒரு கிலோ வாங்கி தலையணை கீழ் வைத்து தூங்க வேண்டும். மறுநாள் காலையில் மிக்ஸியில் அரைத்து 9 லட்டு செய்து, ராமேஸ்வரம் அல்லது தனுஷ்கோடி அல்லது மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் உள்ள பசு மாட்டுக்கு தானம் செய்து, பூஜை செய்து, மருத்துவரின் ஆலோசனைப்படி , அங்கப்பிரதட்சனம் செய்து வர குழந்தை பாக்கியம் கிட்டும்.

7. புத்திர காமேஸ்வரர் யாகம் செய்யலாம்.

8. குலதெய்வ வழிபாடு, பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here