Baby Alu Chat
Baby Alu Chat

Baby Alu Chat :

உருளைக்கிழங்குடன் மற்ற காய்கறிகள் சேர்த்து தருவதால் குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள் மற்றும் இதில் காரம் சேர்க்கப்படாததால் குழந்தைகள் வயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

தேவையான பொருட்கள் :

1. பேபி உருளைக்கிழங்கு – 10

2. வெங்காயம் – 1

3. குடைமிளகாய் – 1

4. தக்காளி – 1

5. எலும்பிச்சை சாறு – 1 ஸ்பூன்

6. சர்க்கரை – சிறிது

7. சாட் மசாலா – 1 ஸ்பூன்

8. கொத்துமல்லி – சிறிதளவு

9. உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் பேபி உருளைக்கிழங்கை சுத்தம் செய்து பிறகு அதனை வேக வைத்து தோல் நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு, வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாய் ஆகியவற்றை நீட்டு வாக்கில் பாதி பாதியாக நறுக்கிக் பாதியாக வேக வைத்துகொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரதில் வேக வைத்து உள்ள உருளைக்கிழங்கு, மற்றும் பாதி வேக வைத்து உள்ள காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக போட்டு கலக்கி பின் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும்.

பிறகு இதனை சிறிய கிண்ணத்தில் போட்டு பிரிமாறினால் சுவையான மற்றும் சத்தான பேபி சாட் மசாலா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here