Baba Baskar in Jagame Thanthiram

ஜகமே தந்திரம் படத்தில் குக் வித் கோமாளி 2 பிரபலம் நடித்திருப்பது டீசரில் தெரிய வந்துள்ளது.

Baba Baskar in Jagame Thanthiram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இந்த இரண்டு படங்களுக்காகவும் தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியானது. இந்த டீசரில் பாபா பாஸ்கர் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஜகமே தந்திரம் படத்தில் குக் வித் கோமாளி 2 பிரபலம்.. டீசரில் வெளியான சீக்ரெட் - யார் அவர் தெரியுமா??

டான்ஸ் மாஸ்டரான இவர் தனுஷிடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.