அமிர்தாவை அவமானப்படுத்தி பேசி உள்ளார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி மற்றும் எழில் கோபமாக பேசிக் கொள்கின்றன.வீட்டில் இருக்கும் அனைவரும் சமாதானம் செய்ய இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றன. கணேஷ் திரும்பி வந்து என் பொண்டாட்டியும் ,குழந்தையும் அனுப்பி வைனு சொன்னா அனுப்பி வச்சுருவியா, இந்த வீட்டுக்குன்னு நீ என்ன பண்ணி இருக்க, வேலைக்கும் போக மாட்டே, குழந்தையும் பெத்துக்க மாட்டே என்றால் என்ன வாழ்க்கை நீ வாழர என்று கேட்டு கோபப்படுகிறார்.எழிலுக்கு ஆதரவாக பேசுகிறார் பாக்யா.
பிறகு எழிலை சமாதானம் செய்து கூட்டிக்கொண்டு போக ஈஸ்வரி அப்போ எனக்கு மரியாதை அவ்வளவு தானா? என்று கேட்கிறார். ராமமூர்த்தி எழிலுக்கு நேரம் சரியில்லை சரியானதும் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல, ஈஸ்வரி நேரம் இவளுக்கு தான் சரி இல்லை என்று அமிர்தாவை சொல்லுகிறார், மேலும் அமிர்தாவை ராசி இல்லாதவள் என்று பேசி அவமானப்படுத்துகிறார். அமிர்தாவின் வாழ்க்கையில் எதுவுமே உருப்படியாக நடக்கல என்று பேசுகிறார் ஈஸ்வரி.
குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஈஸ்வரியை தடுத்து நிறுத்த முயற்சி செய்ய ஈஸ்வரி இன்னும் கோபமாக எழிலோட வாழ்க்கை நல்லா இல்லாததற்கு காரணம் அமிர்தா தான் என்று சொல்கிறார்.
அமிர்தாவை பற்றி தப்பா பேசாதீங்க என்று எழில் கோபப்பட, இன்னொரு வார்த்தை ஏதாவது அமிர்தாவ பத்தி பேசினா ஏதாவது சொல்லி விடுவேன் என்று ஈஸ்வரியிடம் கோபமாக பேசுகிறார். பிறகு நான் படம் பண்ணாததற்கு காரணம் அமிர்தா கிடையாது நீங்கள், நீங்கள் மட்டும்தான் என்று சொல்லி ஈஸ்வரிக்கு அதிர்ச்சியை கொடுக்கிறார்.
நான் என்ன காரணம் என்று கேட்க ஆமாம் நீங்கள் தான் காரணம், நான் கதையை சொல்லி படம் எடுக்கும் நேரத்தில் உங்களைத் தேடி போலீஸ் வீட்டுக்கு வந்தது தான் காரணம். நீங்க கொஞ்ச நேரம் யோசித்து உங்க பிள்ளை கூட போகாம இருந்திருந்தால் நானும் படம் எடுத்திருப்பேன். நீங்கள் சொன்னதெல்லாம் நடந்து இருக்கும் என்று கோபப்பட்டு பேசினார். ஈஸ்வரி இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியாகி நிற்கிறார்.
இதையெல்லாம் கேட்ட ஈஸ்வரி கடைசியில் பழியை தூக்கி என் மீது போட்டுட்டியா என்று கேட்க நான் யார் மீதும் பழி போடல நடந்தது தான் சொல்கிறேன் என்று சொல்கிறார்.நீங்கள் சொன்ன விஷயம் தப்பு கிடையாது, அதை சொல்லும் விதம் தான் தப்பு என்று ஈஸ்வரியிடம் சொல்கிறார்.
அமிர்தா நான் இந்த வீட்டை விட்டு நிலாவை கூட்டிக் கொண்டு போய் விடுகிறேன் என்று சொல்ல ஜெனி நீ ஏன் போக வேண்டும் என்று கேட்கிறார் என்னால் தான் எல்லா பிரச்சனையும் என்று அமிர்தா சொல்ல ஈஸ்வரி நாடகம் போடுறீங்களா என்று கேட்கிறார்.
வீட்டை விட்டு போக சொல்லும் ஈஸ்வரி? எழில் எடுக்கப் போக முடிவு என்ன? பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.