Baakiyalakshmi Upcoming Episodes Updates in October

கோவிலில் ராதிகாவை அவருடைய மகளையும் கோபி கொஞ்சி குலாவ அப்போது அவருடைய அப்பா பார்த்துவிடுகிறார்.

Baakiyalakshmi Upcoming Episodes Updates in October : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தன்னுடைய குடும்பத்திற்கு தெரியாமல் தன்னுடைய கல்லூரி தோழியான ராதிகாவுடன் தொடர்பில் இருந்து வருகிறார் கோபி. எப்படியாவது ராதிகாவை தன்வசப்படுத்தி அவருடன் வாழ தொடங்க வேண்டும் என்ற ஆசையில் கோபி இருக்கிறார்.

வேர்ல்டு கப் மேட்ச் : வங்காளதேசம் கனவு நிறைவேறியது : ஆடுகள விவரம்..

இதற்காக வீட்டுக்கு தெரியாமல் அடிக்கடி ராதிகாவை வீட்டிற்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். பாக்கியா மற்றும் அவருடைய குடும்பத்தார் யார் என்றே தெரியாது என ராதிகாவிடமும் ராதிகா தனக்கு யார் என்றே தெரியாது என தன்னுடைய குடும்பத்தாரிடமும் கதை விட்டு வருகிறார். இருவரிடமும் கோபி எப்போது சிக்குவார் உண்மை எப்போது குடும்பத்திற்கு தெரிய வரும் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

திடீரென அழுத Varalaxmi Sarathkumar – கலாய்த்த இயக்குனர்! | Arasi Shooting Spot

இந்த நிலையில் இன்றைய எபிசோட் முடிவடைந்த பிறகு ஒளிபரப்பான புரோமோ வீடியோவில் ராதிகா வாங்கிய காரை எடுத்துக்கொண்டு ராதிகா, கோபி மற்றும் மய்யூ ஆகியோர் கோவிலுக்கு சென்றுள்ளனர். இதே கோவிலுக்கு கோபி அப்பாவும் சென்றுள்ளார். அங்கு கோபி ராதிகாவுக்கு குங்குமம் வைத்து பின்னர் அமையவிருக்கும் குங்குமம் வைத்து முத்தம் கொடுப்பதை கோபியின் அப்பா பார்த்துவிடுகிறார்.

இவர் மூலம் கோபி பற்றிய உண்மை வீட்டிற்கு தெரிய வந்து பாக்கியலட்சுமி சீரியலில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.