ராதிகாவை கல்யாணம் செய்ய இருப்பதாக கோபியின் அப்பாவுக்காக விஷயம் தெரிந்த நிலையில் வீட்டில் சொல்லப் போன அவருக்கு பெரிய சிக்கல் உருவாகியுள்ளது.

Baakiyalakshmi Upcoming Episode Promo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகாவுடன் நெருங்கி பழகி வருகிறார். ராதிகாவின் அம்மா சீக்கிரம் உங்களது குடும்பத்தை விட்டுவிட்டு வந்து ராதிகாவை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருகிறார்.

இதனால் கோபியும் பாக்கியாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இப்படியான நிலையில் பாக்கியா வீட்டிற்கு வந்த மயூ எங்க அம்மாவுக்கும் கோபி அங்கிளுக்கும் கல்யாணம் நடக்கப் போகுது என கூறினார். இதனால் அதிர்ச்சியான கோபியின் அப்பா இரவில் கோபியுடன் சென்று சத்தம் போட்டு விட்டு இப்போது வீட்டில் சொல்கிறேன் என கூறினார்.

கோபமாக அவர் மாடிப்படிக்கட்டில் கீழே இறங்கும் போது தவறி விழுந்து அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு வாய் பேச முடியாமல் போய்விடுகிறது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனால் கோபியின் ஆட்டத்துக்கு அவருடைய அப்பா முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.