இனியாவை ராதிகா படாத பாடுபடுத்த எதுவும் சொல்ல முடியாமல் சிக்கி தவிக்கிறார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா சமைக்கும் இடத்திற்கு வந்து அவர்களுடன் பேசி பிறகு பசிக்கிறது என சொல்ல பாக்கியா அவனுக்கு சாப்பாடு போட்டு கொடுக்க எழில் சாப்பிடும்போது பாக்கியா மற்றும் அமிர்தாவுக்கு ஊட்டி விடுகிறார்.

மறுபக்கம் ஜெனி நிலா பாப்பாவை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது செழியன் முதல்ல வெளியே கூட்டிட்டு போ என சத்தம் போட ஜெனி அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நிலா பாப்பாவுடன் விளையாடி வருகிறார்.

அப்போது ஜெனியின் அம்மா போன் பண்ண ஜெனி போன் பேச எழுந்து பார்க்க நிலா பாப்பா பெரியப்பா பெரியப்பா என்னை கூப்பிட்டுக் கொண்டு கையில் ஹாட்டின் சிம்பல் காட்டி முத்தமிட்டு செழியன் அருகே சென்று அவனுக்கு முத்தமிட செழியன் மனம் அப்படியே மாறுகிறது.

செழியனும் நிலாவை தூக்கி கொஞ்ச வர ஜெனி உள்ளே வருவதால் செழியன் உடனே தள்ளிப் போய் விடுகிறார். மறுபக்கம் இனியா படிக்காமல் போன் நோண்டிக் கொண்டிருக்க ராதிகா இனியாவை திட்டி போனை புடுங்கி நாளைக்கு வரைக்கும் நீ இந்த போனை எடுக்கவே கூடாது என கண்டிஷன் போடுகிறார்.

நீ படிக்கணும் உங்க அம்மா இருந்திருந்தாலும் அதை தான் பண்ணுவாங்க என சொல்ல நீங்க ஒன்னும் என் அம்மா இல்லையே என இனியா பதிலடி கொடுக்க ராதிகா நீ என்ன சொன்னாலும் நீங்க இருக்கிற வரைக்கும் நான் அம்மா ரோல் தான் எடுப்பேன் என இனியாவை திட்டி படிக்க சொல்கிறார்.

பிறகு இனியா கோபியிடம் என்ன டேடி இவங்க எனக்கு கண்டிஷன் எல்லாம் போட்டுட்டு இருக்காங்க என சத்தம் போட கோபி நான் சமாளிக்கிறேன், கொஞ்சம் அமைதியா இரு என சொல்ல ராமமூர்த்தி கோபியை திட்டுகிறார். அவ கேட்டது தான் சரி. நீ பண்ண வேண்டிய வேலையை அவ பண்ணிக்கிட்டு இருக்கா என ராதிகாவுக்கு சப்போர்ட் செய்ய இனியா, கோபி என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

மறுநாள் காலையில் இனியா 5:30 மணிக்கு அலாரம் வைத்து படிப்பதாக சொல்ல அலாரம் அடித்துக்கொண்டு இனியா தெரிந்து கொள்ளாமல் படிக்க ராதிகா இனியாவை எழுப்பி படிக்க சொல்லி மிரட்ட தாத்தாவும் படிக்க சொல்ல இனியா படிக்கிறேன் என எழுந்து உட்காருகிறார்.

மறுபக்கம் வீட்டுக்கு வந்த பாக்கியா, அமிர்தா, ஜெனி, செல்வி என எல்லோரும் உட்கார்ந்து சந்தோஷமாக பேசிக் கொள்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.