
பாக்யாவுக்கும் பழனிச்சாமிக்கும் கல்யாணம் என அதிர்ச்சி கொடுத்துள்ளார் பழனிச்சாமியின் அம்மா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அமிர்தாவின் வீட்டிலிருந்து வேக வேகமாக வந்த கணேஷ் அமிர்தா உயிரோட இருக்காளா என் குழந்தை உயிரோட தான் இருக்கா என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

அமிர்தா வீட்டுக்கு போய் இருந்தேன் அவங்க அம்மா என்ன வெளியே போ என்று சொல்லாத குறையா வெளியே தள்ளி கதவை சாத்துறாங்க என்று சொல்ல கணேசின் அப்பா அம்மா நீ எதுக்கு அங்க போன நாங்க தான் அமிர்தாவை தேடி கண்டுபிடிக்கிறோம் என்று சொல்லி இருந்தோமே என்று கூறுகின்றனர்.
நீ இறந்து போனதாக தெரிஞ்ச பிறகு உன்னுடைய ஜாதகத்தை எடுத்து போய் ஒரு ஜோசியர் கிட்ட காமிச்சி இருக்காங்க அவர் சொன்னதைக் கேட்டு ஏமாத்தி கல்யாணம் பண்ணி வச்சிட்டதா கோபப்பட்டாங்க அப்போ பெரிய சண்டையாகிடுச்சு அதிலிருந்து அமிர்தாவையும் குழந்தையும் பார்க்கவும் இல்லை என்று சொல்லி சமாளிக்கின்றனர். உண்மை மட்டும் தெரியட்டும் அப்புறம் இருக்கு என கணேஷ் கோபப்பட்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.

அடுத்து கோபி பழனிச்சாமி வீட்டுக்கு வந்து நீ என்ன பெரிய யோக்கியமா பாக்கியாவுக்கு ஏதாவது ஒரு பிரச்சனைனா ஓடி வந்துடுவியா என்று கேள்வி கேட்கிறார். உனக்கும் இன்னும் கல்யாணம் ஆகல அந்த பாக்கியாவும் தனியா இருக்கா அதனால அவளை கரெக்ட் பண்ண பாக்குறியா என்று அசிங்கமாக பேச பழனிச்சாமி கோபப்பட பழனிச்சாமியின் அம்மா அது உனக்கு தேவையில்லாத விஷயம், நான் ரெண்டு பேருக்கும் கல்யாணம் கூட பண்ணி வைப்பேன் என அதிர்ச்சி கொடுத்து கோபியை வெளிய அனுப்புகிறார். பிறகு பழனிச்சாமி நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள் எப்பவும் நல்ல நண்பர்களாக மட்டும் தான் இருப்போம். மற்ற எதை பற்றியும் யோசிக்க வேண்டாம் என கூறுகிறார்.
இங்கே கோடீஸ்வரன் ராதிகாவை அழைத்து நம்ப ஹெட் ஆஃபீஸ்ல என்னை வர சொல்லி இருக்காங்க நான் உடனே அமெரிக்கா கிளம்புறேன் ரெண்டு மாசத்துக்கு அங்க தான் இருப்பேன் அதுவரைக்கும் நம்மளுடைய ஆபிஸோட மொத்த பொறுப்பையும் நீங்கதான் பார்த்துக்கொள்ளனும் எல்லாம் முடிவையும் நீங்களே எடுக்கலாம் என்று சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.

இங்கே பாக்கியா நாளையிலிருந்து ஆப்பத்தையும் மெனு லிஸ்டில் சேர்க்கலாம் என பேசிக் கொண்டிருக்க அங்கு வரும் ராதிகா காண்ட்ராக்ட் படி நாங்க எல்லாருக்கும் ஆறு மாசம் தான் சமையல் காண்ட்ராக்ட் கொடுப்போம், இப்ப நீங்க கேன்டீன் ஆரம்பிச்சு 7 மாசம் ஆயிடுச்சு அதனால உங்களுடைய கான்ட்ராக்ட் முடிஞ்சு போச்சு காலி பண்ணிட்டு கிளம்புற வழியை பாருங்க என அதிர்ச்சி கொடுக்க பாக்யா கண்கலங்கியும் ராதிகா மனம் இறங்க மறுக்கிறார். இதனால் பாக்கியா உட்பட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.