ராதிகாவை சமாதானம் செய்ய கோபி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா மயூவை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே கிளம்பி காரில் ஏறப்போன நிலையில் கோபி ரோட்டில் காலில் விழுந்து கெஞ்ச பாக்கியா குடும்பம் மொத்தமும் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தது.

ஒரு கட்டத்தில் கோபி அப்பா அம்மா பார்ப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ராதிகாவை உள்ளே கூட்டிச் செல்கிறார். பிறகு வீட்டுக்குள் வந்த ஈஸ்வரி கோபியின் நிலைமையை நினைத்து கண்ணீர் விட்டு அழ எழில் இதுக்கே இப்படி பீல் பண்ணா எப்படி பாட்டி அவர் நேத்து நைட்டு என்ன பண்ணாரு தெரியுமா என சொல்லி குடி போதையில் விழுந்து கிடந்த விஷயத்தை சொல்ல இன்னும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அடுத்து கோபி ராதிகாவை வீட்டுக்குள் அழைத்துச் சென்ற நிலையில் இனிமே இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டேன் என கெஞ்ச ராதிகா நம்ப மறுக்கிறார். கோபி உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என காலை பிடிக்க அப்பவும் மன்னிக்க மறுக்கிறார்.

பிறகு எவனோ ஒரு இடியட் அந்த வழியா வந்தவன் போனை எடுத்து அவளுக்கு போன் பண்ணி சொல்லி இருக்கான். வீட்ல அப்பா அம்மா நம்பர மம்மி டாடி என்று சேவ் பண்றது இல்லையா அந்த மாதிரி தான் அந்த இடியட் நம்பரை எப்பவோ சேவ் பண்ணேன். அவளை மறந்துட்டதுனால இத பத்தி எனக்கு ஞாபகம் வரல இப்பவே அவன் நம்பரை டெலிட் பண்ணிட்டு உன் நம்பர வைஃப்னு சேவ் பண்ணுறேன் என போனை எடுக்க போக போன் பாக்கெட்டில் இல்லாமல் இருக்க கோபி தேடி எடுத்து மாற்றுகிறார்.

உங்களால எவ்வளவு அவமானம் என ராதிகா ஆவேசப்பட இனிமே சத்தியமா குடிக்க மாட்டேன் என நம்பு என சொல்ல ராதிகா தொடாதீங்க என கோபப்படுகிறார். பிறகு கோபி குளித்து பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளிடம் என்ன காப்பாத்துங்க என வேண்டிக் கொண்டு சூடத்தின் மீது அடித்து சத்தியம் செய்கிறார்.

மறுபக்கம் ஈஸ்வரி அழுது கொண்டிருக்க ராமமூர்த்தி சமாதானம் செய்ய செழியனும் அங்கு வந்துவிடுகிறார். இருவரும் சமாதானம் செய்ய ஈஸ்வரி செழியனிடம் உங்க அப்பாவுக்கு போன் பண்ணி ஏதாவது ஒரு இடத்துக்கு வர சொல்லு அவன்கிட்ட நான் பேசணும் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.