ரேஷ்மா விலக வனிதா என்ட்ரி கொடுக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளது பாக்கியலட்சுமி சீரியல்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்த நிலையில் கர்ப்பம் காரணமாக அவர் சீரியலை விட்டு வெளியேறினார்.

ரேஷ்மா விலகல்.. ராதிகாவாக வனிதா? பாக்கியலட்சுமி சீரியல் குழு வெளியிட்ட விளக்கம்

அதன் பிறகு அவருக்கு பதிலாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடிக்க ஒப்பந்தமானார். இப்படியான நிலையில் தற்போது ரேஷ்மாவும் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக சமீபத்தில் தகவல் பரவியது. காரணம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சீதா ராமன் என்ற சீரியலில் செம்பருத்தி ஆகிலாண்டீஸ்வரி போன்ற ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு தான் என சொல்லப்பட்டது.

ரேஷ்மா விலகல்.. ராதிகாவாக வனிதா? பாக்கியலட்சுமி சீரியல் குழு வெளியிட்ட விளக்கம்

மேலும் இனி ராதிகா கதாபாத்திரத்தில் வனிதா நடிக்கப் போகிறார் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இப்படியான நிலையில் அது துளி கூட உண்மை இல்லை ராதிகா கதாபாத்திரத்தில் தொடர்ந்து ரேஷ்மா தான் நடிக்கப் போகிறார் என பாக்கியலட்சுமி சீரியல் குழு விளக்கம் அளித்துள்ளது.