கீழே விழுந்த ஜெனிக்கு ஓடிப்போய் உதவியுள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கீழே விழுந்த ஜெனி வலியில் துடித்துக் கொண்டிருக்க செழியன் ஈஸ்வரி தாத்தா என எல்லோருக்கும் போன் செய்ய யாரும் போன் எடுக்காமல் இருக்கின்றனர்.

இந்த நேரம் பார்த்து ராதிகா கீழே வர ஜெனி வழுக்கி விழுந்த விஷயத்தை சொல்லி ரொம்ப பயமா இருக்கு என அழுது புலம்ப ராதிகா பயப்பட வேண்டாம் ஹாஸ்பிடலுக்கு போயிடலாம் என சொல்லி ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று அட்மிட் செய்து பாக்கியாவுக்கு போன் செய்து நான் சொல்வதைக் கேட்டு பயப்படாதீங்க, ஜெனி கீழே விழுந்துட்டா, அவளை ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கேன் நீங்க வந்துடுங்க என சொல்கிறார்.

அதற்குள் ஜெனியை பரிசோதனை செய்த டாக்டர் ராதிகாவை அழைத்து அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல குழந்தை நல்லா இருக்கு, கீழே விழுந்ததில் அவங்க ரொம்ப பயந்து இருக்காங்க அதான் வேற எதுவும் இல்லை என சொல்ல ராதிகா நிம்மதியாக இருக்கிறார். பிறகு ஜெனியை சென்று பார்க்க ஜெனி ராதிகாவின் கையை பிடித்து நன்றி கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் செழியன் மற்றும் பாக்யா என இருவரும் ஆஸ்பிட்டல் வர ராதிகா எதுவும் பிரச்சனை இல்லை பயப்பட வேண்டியதில்லை என டாக்டர் சொல்லிவிட்டதாக சொல்லப் பிறகு இருவரும் சென்று ஜெனியை பார்க்கின்றனர்.

செழியன் உள்ளே வந்து ஜெனியை பார்த்து அழுது கொண்டு நலம் விசாரிக்க ஜெனி கட்டிப்பிடித்துக் கொண்டு நான் ரொம்ப பயந்துட்டேன் அதனால எனக்கு வலிக்கிற மாதிரி இருந்துச்சு நா முதல்ல உனக்கு தான் போன் பண்ணினேன் என சொல்ல செழியன் நான் ஒரு க்ளைண்ட் மீட்டிங்ல இருந்து அதனால போன் எடுக்க முடியல என மன்னிப்பு கேட்கிறார்.

இங்கே வீட்டில் ஈஸ்வரி ஜெனியை நினைத்து பதற்றமாக இருக்க அமிர்தா அவங்களுக்கு எதுவும் ஆகாது நல்லபடியா வீட்டுக்கு வந்துருவாங்க என ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு ஜெனி வீட்டுக்கு வர எல்லோரும் நலம் விசாரித்து உட்கார வைக்க செழியன் நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு என மேலே அழைத்துச் செல்கிறார்.

அதன் பிறகு ராதிகா வந்து ஜெனிக்கு எப்படி இருக்கு என நலம் விசாரித்து வீட்ல யாரும் இல்லாததால் நான் தான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனேன் என சொல்ல ஈஸ்வரி அப்ப நீ தான் அவளை கீழே தள்ளி விட்டாயா என கேட்டு ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌‌