செழியன் பாரில் குடித்துக் கொண்டிருப்பதை கோபி பார்த்து விடுகிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் சீரியல்கள் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா யாருமே நன்னாரே பாட்டு போட்டுவிட்டு டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார் சத்தத்தை கேட்டு உள்ளே வந்த ஜெனி டான்ஸ் ஆடுவதை பார்த்து விட்டு வெளியே வந்து விடுகிறார் ஈஸ்வரி மேல என்ன சத்தமா இருக்கு என்று கேட்க இனியா டான்ஸ் ஆடிட்டு இருக்கா என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரம் கழித்து காதில் ஹெட் போன் உடன் கீழே வர என்னடி மேல சத்தம் என்று ஈஸ்வரி கேட்கிறார். அதற்கு படிச்சிட்டு இருந்தேன் என்று இனியா சொல்ல படிச்சதுக்கு ஏன் இப்படி மூச்சு வாங்குது என்று ஜெனி கேட்கிறார் அது என்னோட மல்டி டேலண்ட் என்று சொல்ல ஒருவேளை உங்க செய்ய தெரியாது இதுல மல்டி டேலன்ட் என்று ஈஸ்வரி நக்கல் அடிக்கிறார். கிச்சனில் தண்ணீர் பாட்டில் ரொம்ப வடியும் வரை காதிலே போன் கேட்டுக்கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் இனியாவை பார்த்து ஈஸ்வரி திட்டுகிறார்.
மீண்டும் இனியா டான்ஸ் பிராக்டிஸ் செய்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அவரது தோழி போன் பண்ணுகிறார் என்னை நீ பண்ணிட்டு இருக்க என்று சொல்ல நான் டான்ஸ் ஆடிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார் இன்னும் செலக்ட் ஆகல அதுக்குள்ள ப்ராக்டிஸ் பண்றியா என்று கேட்க நான் செலக்ட் ஆயிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு நான் பிராக்டிஸ் பண்ணனும் போன வை என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார். திரும்பவும் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க அந்த நேரம் பாக்யா வந்து பார்த்து விடுகிறார் என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க பாட்டு பாடிட்டு இருக்கேன் என்று சொல்லி சமாளிக்கிறார் முகத்துல வேர்த்திருக்கு பாட்டு பாடுகின்றேன் என்று சொல்கிறாய் என்று சொல்ல கிளைமேட் அப்படி இருக்கு என்று சமாளிக்க பார்க்கிறார் வெளி என்று வர என்ன பாரு வீட்டுக்குள்ள ஏசியில் இருக்கிற உனக்கு வேர்த்துடுச்சா என்று பாக்கியா கேள்வி கேட்கிறார் நீ டான்ஸ் ஆட நான் பாத்துட்டேன் என்று பாக்கியா கேட்க, இனியா அவரை சமாளித்து விடுகிறார்.
மறுபக்கம் கோபி பாரில் உட்கார்ந்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அவருடைய நண்பர் செந்தில் வருகிறார். என்னடா புதுசா மெனு கார்டு எல்லாம் பார்க்கிற என்று கேட்க நீங்க எந்த ஃப்ரெஷ் ஜூஸ் நல்லா இருக்குனு பாக்குற என்று சொல்ல என்னடா அதிசயமா இருக்கு என்று கேட்க எல்லாம் ராதிகாக்காக தான் என்று சொல்லுகிறார். நான் குடிச்சிட்டு வந்ததால ராதிகா ரொம்ப கஷ்டப்பட்டா எனக்கு ரொம்ப கில்ட் ஆயிடுச்சு, இனிமேல் இருந்து கூட குடிக்க போறது இல்லை என்று சொல்லுகிறார்.நல்ல விஷயம்தான் கோபி ஆனா நான் குடிக்கலாம்ல என்று செந்தில் கேட்க நீ குடி எனக்கும் சேர்த்து குடி என்று கோபி சொல்லுகிறார். அப்போது கோபிக்கு பாக்கியா ரெஸ்டாரன்ட் சேர்ந்த செப் ஃபோன் பண்ணுகிறார். பாக்யா ரெஸ்டாரன்ட் சேர்ந்த விஷயத்தை சொன்னவுடன் கோபி ரொம்ப சந்தோஷப்படுகிறார். இதெல்லாம் தேவையா என்று செந்தில் கேட்க நான் அவளை அழைக்க போறேன் என்று கோபப்படுகிறார். பாக்யா செந்திலுக்கு ஆதரவாக பேச நீ என்னோட பிரண்டா இல்ல அவனோட பிரண்டா என்று சொல்லி அவரை ஆப் செய்கிறார்.
இருவரும் பேசிவிட்டு கிளம்ப அந்த இடத்தில் செழியன் இருப்பதை பார்த்து கோபி அதிர்ச்சியாகிறார். செழியன் எதற்காக குடிக்க வந்தார் கோபியிடம் என சொல்லப் போகிறார் அதற்கு கோபியின் பதில் என்ன என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.