ராமமூர்த்தியின் இறப்பு குடும்பத்தினரை பேரதிர்ச்சியாக்கியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி தூக்கம் வராமல் இருக்க ஈஸ்வரி என்ன ஆச்சு தூங்கலையா என்று கேட்க எனக்கு தூக்கம் வரல நீ தூங்கு என்று சொல்லி விடுகிறார். இரவு முழுவதும் தூங்காமல் ராம மூர்த்தி நடந்து கொண்டே இருக்க இருக்க ஈஸ்வரி வெளியே வந்து உங்களுக்கு தூக்கம் வரலையா சுடு தண்ணீர் வைத்துக் கொடுக்கவா என்று கேட்க எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்கிறார். நான் தூங்காமல் நீ தூங்க மாட்ட அப்படித்தானே என்று கேட்க ஆமாம் என்று ஈஸ்வரி சொல்கிறார். இருவரும் தூங்க செல்கின்றனர்.
காலையில் ஈஸ்வரி பூஜை செய்ய பாக்கியா காபி போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து செல்வி வர ஈஸ்வரி ஏன் இன்னிக்கி லேட் என்று கேட்க இது மட்டும் கரெக்டா கேட்டுருவீங்களா என்று கேட்கிறார். பிறகு என் கனவுல நீங்க வந்தீங்க சிகப்பு கலர் புடவை கட்டிக்கிட்டு நெத்தில பெரிய பொட்டு வச்சு நிறைய மல்லிகை பூ வெச்சு அழகா வந்தீங்க என்று சொல்கிறார். பாக்யா எங்க அத்தை இப்ப மட்டும் எல்லாம் எப்பவுமே அழகு என்று பேசிக்கொள்கின்றன. பிறகு ஐயா இன்னும் எழுந்திருக்க இல்லையா என்று கேட்க நைட் ஃபுல்லா தூங்கவே இல்ல பேசிக்கிட்டே இருந்தாரு அதுதான் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன் என்று ஈஸ்வரி சொல்கிறார்.
கிச்சனில் டிபன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்யா ஈஸ்வரிடம் வந்து மாமா இன்னுமா தூங்கிட்டு இருக்காரு என்று கேட்க சரி நான் போய் எழுப்பினேன் என்று ஈஸ்வரி எழுப்பப் போகிறார். எவ்வளவு எழுப்பியும் ராமமூர்த்தி எழுந்திருக்கவில்லை. பயந்து பாக்யாவை கூப்பிடுகிறார் ஈஸ்வரி. பாக்கியா கத்தி எழுப்பியும் அசைவு இல்லாமல் இருக்கிறார் ராமமூர்த்தி. பிறகு செழியனை கூப்பிட அனைவரும் வந்து அழுது எழுப்புகின்றனர். செழியன் பக்கத்தில் இருக்கும் டாக்டரை கூப்பிட போக, செல்வி தாத்தா நம்மளை விட்டுட்டு போயிட்டாரு என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகி பார்க்கின்றனர்.
டாக்டர் வந்து செக் பண்ண அவர் என்ன சொல்லப் போகிறார்? அதனை குடும்பத்தினர் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார்கள்? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.