பாக்கியாவை வெறுப்பேத்தி பல்பு வாங்கியுள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ராதிகா மயூவை பார்க்க வீட்டுக்கு வந்து அப்போது அம்மாவிடம் அந்த வீட்ல என்னை யாருமே மதிக்க மாட்றாங்க, அங்கே இருக்கவே புடிக்கல என சொல்ல அவரது அம்மா நீ வந்ததும் உன்னை ஆரத்தி எடுத்து வர வைத்து மரியாதை கொடுப்பாங்கன்னு நெனச்சியா, உன்னுடைய வாழ்க்கையை தக்க வச்சிக்கணும்னா நீ இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்கிட்டு தான் ஆகணும் என சொல்கிறார்.

அதன் பிறகு ராதிகா அங்கிருந்து ஆபீசுக்கு கிளம்ப ஆபீஸில் பாக்கியா, செல்வி எல்லோரும் கேண்டினில் பிஸியாக இருக்கும் போது அங்கு வரும் ராதிகா காபி கேட்டு பாக்யாவிடம் என்னமோ சுயமரியாதை இது அதுமெல்லாம் பேசுவீங்க, அப்புறம் எப்படி இன்னமும் அந்த வீட்டில் இருக்கிறீர்கள் என கேள்வி கேட்க சுயமரியாதை எனக்கு மட்டும் கிடையாது எல்லாருக்கும் இருக்கு அந்த வீட்ல ஒருத்தர் கூட உங்கள மதிக்கல. அப்படி இருக்கும்போது உங்களை பிடிக்காத உங்க வீட்ல நீங்க எப்படி இருக்கீங்க உங்களுக்கு சுயமரியாதை இல்லையா என கேட்டு பதிலடி கொடுக்கிறார்.

இதனால் கடுப்பாகும் ராதிகா காபி நல்லாவே இல்லை என அங்கிருந்து எழுந்து வருகிறார். அடுத்ததாக வீட்டில் பாக்கியா எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்க சாப்பாடு சூப்பர் என புகழ்ந்து தள்ள அந்நேரம் வீட்டுக்கு வரும் கோபி இந்த குடும்பத்தையா விட்டுட்டு போனோம் என வருந்துகிறார்.

பிறகு கோபி ரூமுக்கு வந்ததும் ராதிகா டம்ளரில் தண்ணி கொண்டு வந்து கொடுக்க என்ன டம்ளர் எடுத்துட்டு வர? டின்னர் இல்லையா என கேட்க இன்னைக்கு சாப்பாடு இந்த தண்ணி தான் குடிச்சிட்டு படுத்து தூங்குங்கள் என கோபமாக பேசுகிறார். இந்த வீட்டில ஒருத்தரும் என்னை மதிக்க மாட்டாங்க கிச்சன் குள்ளவே விட மாட்டாங்க என கோபியிடம் கம்ப்ளைன்ட் செய்ய அதுக்குத்தான் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக்கலாம்னு சொன்னேன் என சொல்கிறார்.

ஆனால் ராதிகா எனக்கு இந்த வீட்டில ஒரு கிச்சன் ஏற்பாடு பண்ணி கொடுங்க என கேட்க நீ சொல்ற மாதிரி எல்லாம் செய்ய முடியாது பாக்கியா என கோபி பாக்யாவின் பெயரை உளர ராதிகா இன்னமும் உங்க மனசுல பாக்கியா தான் இருக்கா என சத்தம் போடுகிறார்.

கோபி இல்ல இல்ல ராதிகானு தான் சொல்ல வந்தேன் என சொல்லி நீ பசியில இருக்க அதனால தான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்க, நான் இப்பவே ஆன்லைன்ல ஆர்டர் பண்றேன் என சொல்லி கோபி நைசாக எழுந்து வெளியே வருகிறார். வெளியே வந்த கோபி இவ கூட வாழவே முடியாது போலவே செத்துப் போயிடுவான் போல என புலம்பி தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌ ‌‌