இனியாவிற்கு பாக்கியலட்சுமி ஷாக் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி எழிலுக்கு போன் போட்டு தாத்தாவின் பிறந்தநாளுக்கு வருமாறு கூப்பிட எழில் நாங்கள் வந்தா உங்களுக்கு பிடிக்குமா என்று கேட்க நீ வராதே என்று சொல்லி வைத்து விடுகிறார் ஈஸ்வரி.
பிறகு அழுது கொண்டிருக்க அங்கு வந்த ராமமூர்த்தி எதுக்கு அழுதுகிட்டு இருக்க யாரு கிட்ட பேசின என்று கேட்க எழிலிடம் தான் பேசின அவ வரன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல என்று சொல்ல அதற்கு நீ வர வேண்டாம்னு சொல்லிட்டியா என்று கேட்க ஆமாம் வேற என்ன நான் சொல்றது அப்படின்னு சொல்லி அழுகிறார்.
மறுபக்கம் அமிர்தா எழிலை பங்க்ஷனுக்கு போக சொல்லி வற்புறுத்துகிறார். ஆனால் இந்த நிலைமையில போனா அங்க ஏதாவது பிரச்சனை நடக்கும் என்று சொல்ல நான் வந்தால் தான் பிரச்சனை நடக்கும் நீங்க மட்டும் போயிட்டு வாங்க என்று சொல்ல எழில் மறுத்துவிட்டு எழுதி செல்கிறார்.
செழியன் பங்க்ஷன் வேலைகளை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருக்க அதை பார்த்த ஜெனி இப்படி இருக்க தான் நான் ஆசைப்பட்ட செழியா, என்று ஜெனி சொல்ல இருந்தாலும் நம்ம வீட்ல நடக்கிற ஃபங்ஷன்ல முதல்முறையா எழில் கலந்துக்க மாட்டான். ரொம்ப வருத்தமாக இருக்கிறது என்று பேசுகிறார். மறுபக்கம் இனியா பாக்யாவிடம் எழில் அண்ணா நாளைக்கு வருமா, எனக்கு அமிர்தா அக்கா,நிலா பாப்பா எல்லாரையும் பாக்கணும் போல இருக்கு என்று கேட்க அவனுக்கு நாளைக்கு தாத்தாவோட பிறந்தநாள் என்று தெரியும் என்று சொல்லுகிறார். நீ கூப்பிட்டியாமா என்று கேட்க நான் கூப்பிடல வீட்ல சொல்லி இருப்பாங்க என்று சொல்லுகிறார் பாக்கியா.
நானும் செழியன் அண்ணாவும் உன்ன அழவெச்சிருக்கொம் ஆனா நீ எங்களால் வெளிய அனுப்பிச்சது இல்ல,பாசமா இருந்த எழில் அண்ணாவை ஏன் அனுப்புன என்று கேட்டால் அதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு என்று சொல்லுகிறார். பிறகு இதுக்கு மேல நான் ஒரு தப்பு பண்ணாலும் என்னையும் வெளியே அனுப்புவியா என்று கேட்க அனுப்புறதுக்கான காரணம் இருந்தா கண்டிப்பா அனுப்புவேன் என்று சொல்ல இனியா ஷாக் ஆகிறார்.
ஈஸ்வரி ராமமூர்த்திக்கு 12 மணிக்கு விஷ் பண்ணுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் விஷ் பண்ணாரா அதற்கு ராமமூர்த்தியின் ரியாக்ஷன் என்ன என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.