கோபியிடம் சண்டை போட்டுள்ளார் ராதிகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபிக்கு ராதிகா சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க கோபி வேண்டாம் என்று சொல்கிறார் பிறகு சாப்பாட்டை தட்டி விட இவர்களுக்கிடையே வாக்குவாதம் அதிகமாக ஆகிறது. கோபமாக பேசிவிட்டு ராதிகா கிளம்ப கோபி பாக்கியாவிடம் இருந்ததை நினைக்கிறார்.
கோபி சோபாவில் தூங்கி எழுந்திருக்க கீழே இருந்த தட்டை பார்த்து அப்படியே உட்காருகிறார். பிறகு சென்றுவிட ராதிகா அதனை சுத்தம் செய்கிறார். செழியன் எழிலுக்கு போன் போட்டு நலம் விசாரிக்கிறார். வீட்டுக்கு கூப்பிட எழில் மறுத்து பேசுகிறார்.
செழியனை பார்த்த கோபி, எழிலை பார்க்க சென்ற விஷயத்தை சொல்லி, ஏதாவது பண உதவி வேணும்னா என்கிட்ட கேளு நான் கொடுக்கிறேன் நான் கொடுத்தேன்னு சொல்லாம குடுத்துடு,என்று சொல்ல நானே கொடுத்துப்பேன் பா என்கிட்டே இருக்கு என்று செழியன் சொல்லுகிறார். கோபியிடம் எனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப் போகிறது என்று சொல்ல கோபி கட்டிப்பிடித்து சந்தோஷப்படுகிறார்.
மயூ ராதிகாவிடம் சண்டை போடாதீங்க மம்மி எனக்கு ரொம்ப பயமா இருக்கு ப்ளீஸ் என்று கேட்கிறார். மறுபக்கம் ராமமூர்த்தியின் 80வது நாள் பிறந்தநாள் குறித்து ஈஸ்வரியிடம் பேச முடிவெடுக்கின்றனர்.
மயூவின் கேள்விக்கு ராதிகாவின் பதில் என்ன? ஈஸ்வரி என்ன சொல்லப் போகிறார்? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.