எழில் வீட்டுக்கு பாக்கியா வர, செழியன் பதற்றமாகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் பாக்யாவிடம் வீடு பார்த்த விஷயத்தையும் விரைவில் பால் காய்ச்ச போவதாகவும் சொல்லுகிறார். பாக்கியா எழிலுக்கு இது நம்மளோட சோதனை காலம் திரும்பவும் நம்ம பழைய மாதிரி ஒன்னா சந்தோஷமா இருப்போம் எழில் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார். மறுநாள் பாக்கியா எழில் பார்த்திருக்கும் வீட்டிற்கு தேவையான பொருட்களை செல்வியுடன் வாங்கிக் கொண்டு வருகிறார்.
அமிர்தாவின் அம்மா என்னென்ன வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க பாக்யா எல்லா பொருளையும் வாங்கிக்கொண்டு வீட்டில் உள்ளே வருகிறார். எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க எதுக்குமா இவ்வளவு பொருள் வாங்கிட்டு வந்து இருக்கீங்க என்று எழில் மற்றும் அமிர்தா கேட்கின்றனர்.
பிறகு பூஜை பண்ணி பால் காய்ச்சிவிட்டு எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.அந்த நேரம் பார்த்து எழிலுக்கு போன் வர அவர் வெளியே சென்று விடுகிறார். மறுபக்கம் நிலா பாப்பா சுச்சு வருதுமா என்று சொல்ல அமிர்தா எழுந்து சென்று விடுகிறார். அமிர்தாவின் அம்மா பாக்கியாவிடம் அம்மா எப்படி இருக்காங்க கொஞ்சம் தேறிட்டாங்களா என்று கேட்க, கொஞ்சம் கொஞ்சமா இப்பதான் மாறிக்கொண்டு வராங்க என்று சொல்லுகிறார்.
இருந்தாலும் உங்க மேல எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்று சொல்லுகிறார். நீங்க மாப்பிள்ளையும் அமிர்தவியும் வீட்டை விட்டு வெளியே போக சொன்னதுல எனக்கு உடன்பாடு இல்லை. பெரியவர் இறந்ததுக்கு அப்புறமாவது நீங்க அங்கேயே வச்சுப்பீங்கன்னு நினைச்சேன் ஆனா திரும்பவும் அனுப்பிட்டீங்க அதுதான் மனசு கஷ்டமா இருக்கு இருந்தாலும் உங்க மேல தப்பு சொல்லல, நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க என்று சொல்லுகிறார்.
பாக்யா, காலையிலிருந்து நைட்டு தூங்குற வரைக்கும் என் கூட இருக்கிறது எழில் மட்டும்தான். ஆனால் அவனை இப்படி பிரிஞ்சு இருக்கிறது என் உடம்புல இருந்து பாதி உசுரே வெளியே விட்ட மாதிரி இருக்கு. இனியா, செழியனை விட என் மேல அக்கறையா இருக்கிறது எழில் தான். அவன் ஒரு கனவோட இருக்கான் ஆனா அந்த வீட்ல இருந்தா அவங்களோட கனவு நிறைவேறாது.எழில் நிச்சயமா ஒரு நாள் ஜெயிப்பான்,நாங்க எல்லாரும் ஒண்ணா இருப்போம் என்று கண்கலங்கி பேச இதையெல்லாம் எழில் பார்த்து கண் கலங்கி சந்தோஷப்படுகிறார். அந்த நாளைத்தான் நான் என்கிட்ட இருக்க கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார் பாக்கியா.
செழியன் ரூமில் டென்ஷன் ஆக பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஜெனி வந்து என்னாச்சு செழியா கீழே பாட்டி கிட்ட பேசாம வந்துட்ட, இப்ப வந்து டென்ஷனா பேசிகிட்டு இருக்க என்ன ஆச்சு?என்று கேட்க முதலில் சொல்ல மறுத்த செழியன், பிறகு ஆபிஸில் இருக்கும் பிரச்சனையை ஜெனியிடம் சொல்லுகிறார். ஏற்கனவே இரண்டு பேரை நிறுத்திட்டாங்க என்னை நிறுத்திடுவாங்கன்னு எனக்கு பயமா இருக்கு பதட்டமா இருக்கு என்று சொல்ல ஜெனி அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது நீ அதெல்லாம் டென்ஷன் ஆகாத என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார்.
ஈஸ்வரி மற்றும் இனியா உட்கார்ந்திருக்க, பாக்கியா வருகிறார். ஈஸ்வரி பாக்யாவிடம் என்ன பேசுகிறார்?பாக்யா சொன்ன பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.