BaakiyaLakshmi Serial Today Episode Update 17-09-24
BaakiyaLakshmi Serial Today Episode Update 17-09-24

கோபி ராமமூர்த்தி பற்றி பேச குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் காபி ஷாப்பில் கோபி மற்றும் செழியன் பேசுகின்றனர் செழியன் ஆபீசில் நிறைய பிரச்சனை என்று சொல்ல என்ன பிரச்சனை என்று கேட்க அது என்னோட போகட்டும் விடுங்க என்று சொல்லுகிறார். அதற்கு கோபி ஆபீஸ் நானே பிரச்சினை இருக்கத்தான் செய்யும் நானும் 40 வருஷமா நடத்திட்டு ஒரு லாஸ் ஆனதுனால மூடிட்டேன் ஆனா இப்போ ஒரு ரெஸ்டாரன்ட் வச்சு அதுல நல்லா சம்பாதிச்சுக்கிட்டு இருக்கேன். என்று ஆறுதலாகவும் மோட்டிவேஷனல் ஆகவும் பேசுகிறார்.

செழியன் இந்த மாதிரி யாராவது பேச மாட்டாங்களான்னு தோணுச்சு தேங்க்ஸ் என்று சொல்ல நான் உன்னோட டேடி எதுக்கு எனக்கு தேங்க்ஸ் சொல்ற என்று பேசுகிறார். பிறகு பாக்கியா போட்டோ திறப்பு விழா செய்வதை கோபியிடம் சொல்ல கோபி உடனே பாக்யாவை திட்டி பேசுகிறார் இதனால் கோபமான செய்ய என் முன்னாடி எங்க அம்மாவ பேசாதீங்க என்று சொல்ல எங்கப்பா அன்னைக்கு எல்லாரும் முன்னாடியே அடிச்சாரு, அன்னைக்கு வந்து என் அப்பாவை ஏன் அடிக்கிறீங்கன்னு யாரும் கேட்கல ஆனா உங்க அம்மாவை நான் சும்மா கிண்டல் கூட பண்ணி பேசிட கூடாது உடனே வந்துடுவீங்க என்று சொல்லுகிறார். இருவரும் அங்கிருந்து கிளம்புகின்றனர்

ரெஸ்டாரண்டில் போட்டோ திறப்பு விழாவிற்கு பாக்கியா ஏற்பாடுகளை செய்ய ஒவ்வொருவராக வருகின்றனர். பழனிச்சாமி எழில் என அனைவரும் வர ஈஸ்வரியும் இனியாவும் வருகின்றனர்.

பாக்யா ஈஸ்வரி இடம் நீங்க வந்து தொரந்து வையுங்க அத்தை என்று சொல்ல என்னால முடியாது என்று சொல்லுகிறார். பழனிச்சாமி நீங்க தொறந்து வச்சா தான் ஐயா சந்தோஷப்படுவாரு அவரு உங்க முகத்தை பார்க்கணும்னு தான் ஆசைப்படுவாரு என்று சொல்லி அவர் தொறக்க எழுந்து நிற்க அந்த நேரம் பார்த்து கோபி வந்து நிற்கிறார். ஈஸ்வரி போட்டோவை திறந்து வைக்க அனைவரும் பூ போட்டு மரியாதை செய்கின்றனர்.

செழியன் அனைவரிடமும் தாத்தாவைப் பற்றி உங்க எல்லாருக்குமே தெரியும் அவரைப்பற்றி உங்களுக்கு தெரிந்த நாலு வார்த்தை பேசுங்க என்று சொல்ல முதலில் மைக்கை செல்வி வாங்குகிறார். நான் பாக்கியா அக்கா வீட்ல வேலை செய்ற ஆனா ஒரு நாளும் அவர் என்ன வேலைக்காரியால் நடத்துவது கிடையாது அதட்டி பேசுனது கிடையாது என்ன ஒரு பொண்ணு மாதிரி தான் பார்த்தாரு என்று கண்கலங்கி அழுது கொண்டே வேறு என்ன பேசுறது எனக்கு தெரியல என்று மைக்கை பாக்யாவிடம் கொடுக்கிறார்.

பாக்கியா பேசியபோது நான் கல்யாணம் ஆகி வந்ததுல இருந்து என் மாமாவை பத்தி பேசணும்னு தான் இன்னிக்கு ஒரு நாள் பத்தாது அவரு என்னோட அப்பாவா இருந்து என்ன வழி நடத்தி இருக்காரு இதுக்கு மேலயும் வழி நடத்துவார் என்று நான் நம்புறேன் எல்லாத்துக்கும் ரொம்ப நன்றிப்பா என்று போட்டோவை பார்த்து திரும்பி சொல்லி அழுகிறார்.

அதனைத் தொடர்ந்து எழில் அமிர்தா செழியன் இனியா என அனைவரும் பேசுகின்றனர். பிறகு பழனிச்சாமி பேசுகையில் எல்லாராலையும் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திட முடியாது ஆனா ஐயா அந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்காரு, எப்பவுமே வெள்ளை வேட்டி சட்டையில் ஐயாவ பார்க்கும்போது கையெடுத்துத கும்பிடனும் போல தோன்றும். உங்ககிட்ட பேசி பழகுனத ஒரு பாக்கியமா நினைக்கிறேன் என்று பேசுகிறார் பழனிச்சாமி. செழியன் ஈஸ்வரி இடம் பேசுகிறீர்களா என்று கேட்க வேண்டாம் என மறுத்து விடுகிறார்.

உறவினர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வந்து ராமமூர்த்தியை பற்றி பேசுகின்றனர். செழியன் அவ்வளவுதானா எல்லாரும் பேசியாச்சா என்று கேட்க கோபி இல்ல நான் பேசணும் என்று வந்து போட்டோவிற்கு மலர் தூவி கையில் மைக்கை வாங்குகிறார்.

அவர் ராமமூர்த்தி பற்றி என்ன பேசினார் அதற்கு குடும்பத்தார்களின் ரியாக்ஷன் என்ன என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.