வருத்தத்தில் பாக்கியா இருக்க கோபிக்கு உண்மை தெரியவந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யாவும், இனியாவும் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரி வருகிறார். நான் எதுவும் தப்பா சொல்லல செழியன் வாழ்க்கையில எவ்வளவு நடந்துச்சு? ஆனா இப்போ அவன் இரண்டாவது குழந்தை பெத்துக்கிட்டு சந்தோஷமா வாழரான். அவனை பத்தி கவலைப்பட தேவையில்லை. நான் உடனே எல்லாம் உன் மேல கோபப்படல முதலில் பொறுமையாக தான் சொன்னேன். ஆனா இப்போ கோபப்படும்போது அவன் வீட்டை விட்டு வெளியே போவா நான் நினைக்கல எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம் என்றுதான் நினைச்சேன் என்று சொல்கிறார்.
ஈஸ்வரி போன் போட்டு வர சொல்லு என்று சொல்ல, பாக்கியா வேணாம் அத்தை அவனுக்குள்ள நிறைய கனவுகள் இருக்கு அத அவன் நிறைவேற்றி கண்டிப்பா என்னோட பையன் அவனா இந்த வீட்டுக்குள்ள வருவான் என்று சொல்லி எழுந்து செல்கிறார்.
பிறகு ரூமுக்குள் இனியா அழுது கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கோபி போன் போட்டு காலேஜில் ஏதாவது பிரச்சனையா என்று கேட்க, இல்லை வீட்டில் தான் பிரச்சனை என்று சொல்கிறார் இனியா. நடந்த விஷயங்களை எல்லாம் கோபியிடம் சொல்ல ஷாக் ஆகிறார்.. பிறகு எழிலுக்கு போன் போட சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது பிறகு அமிர்தாவிற்கு ஃபோன் பண்ணுகிறார்.
முதலில் அமிர்தா எடுக்காமல் இருக்க இரண்டாவது முறை எடுத்துப் பேசுகிறார். கோபி நடந்ததெல்லாம் எனக்கு தெரியும் என்கிட்ட எதுவுமே சொல்லல நான் வந்து பார்க்கிறேன் எங்க இருக்கீங்க என்று கேட்க அமிர்தா ஹோட்டலில் என்று சொல்லிவிடுகிறார்.
ஹோட்டலுக்கு வந்த கோபி என்ன சொல்கிறார்?அதற்கு எழில் என்ன சொல்லப் போகிறார்? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.