எழிலை நினைத்து வருத்தத்தில் உள்ளார் பாக்யா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்யாவிடம் அவனை வேலைக்கு போ,ஒரு குழந்தை பெத்துக்க என்று சொன்னது தப்பா என்று கேட்கிறார். நான் அவன் போகணும்னு எல்லாம் சொல்லல, அவனும் போய் இருக்க மாட்டான் நீ சொன்னதுனால தான் போயிட்டான். நீ சொல்லி இருந்தா போயிருக்க மாட்டான். என்று கோபமாக சொல்லிவிட்டு ஈஸ்வரி சென்று விடுகிறார்.
பாக்யா எழிலை அனுப்பியதை நினைத்து கதறி அழுகிறார். என் புள்ளையை நானே வெளியே அனுப்பிட்டேன் என்று அழ அனைவரும் ஆறுதல் தெரிவிக்கின்றன. எல்லோரும் போன் போட்டு கூப்பிடுங்க என்று சொல்ல செழியன் போனை எடுக்கிறார். ஆனால் பாக்யா போனை பிடுங்கி வேணாம். அவன் நிறைய கனவுகளோடு இருக்கான் அவனை யாரும் கூப்பிடாதீங்க என்று சொல்லுகிறார்.
என் பையன் ஒரு பெரிய படம் பண்ணுவான் பெரிய டைரக்டர் ஆவான் திரும்பவும் இந்த வீட்டுக்கு வருவான் என்று பாக்கியா சொல்லுகிறார். மறுபக்கம் எழில் ,அமிர்தா, நிலா மூவரும் ஒரு ஹோட்டலில் வந்து தங்க நிலா இது யாரோட வீடு என்று கேட்க இது வீடு இல்லை ஹோட்டல் என்று சொல்கிறார். நம்ம வீட்டுக்கு போலாம் பா என்று சொல்ல, வேண்டாம் என்று சொல்கிறார்.
அமிர்தா எழிலிடம் மன்னிப்பு கேட்க எழில் என்ன சொல்லுகிறார்? எழில் எடுக்கப் போக முடிவு என்ன? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.