ராமமூர்த்தி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக லெட்டரை எழுதி வைத்திருக்க அதை பிரித்து படித்து குடும்பத்தினர் அனைவரும் அழுகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் உடனே வீட்டுக்கு வர ஏதாவது மறந்துட்டு போயிட்டியா என்று பாக்கியா கேட்கிறார். இல்லம்மா நாங்க வெளியே இருக்கும்போது அப்பா வந்தாரு இனியாவ காரில் கூட்டிட்டு போய் விடுகிறேன் என்று சொன்னதும் சரி என்று சொல்லி விட்டேன். ஏற்கனவே அவரு டிப்ரஷன்ல இருந்தாரு திரும்பவும் அவர் கூட வாக்குவாதம் பண்ணி டிஸ்டர்ப் பண்ண விரும்பல இனியாவும் தாத்தாவ நினைச்சு அழுதுகிட்டே இருக்கா அவர் கூட போனா கொஞ்சம் ரிலீஃபா இருப்பா அதனாலதான் அனுப்புன நான் பண்ணது தப்பா மா என்று கேட்ப இல்ல சரிதான் பா என்று பாக்யா சொல்லுகிறார். உடனே செல்வி ஏற்கனவே உன் மேல கோவமா இருந்தாரு இப்ப நடந்த விஷயத்துக்கு இன்னும் உன் மேல கோவமா இருப்பாரு இனியாவ கூட்டிட்டு போய் ஏதாவது பண்ணா என்ன பண்ணுவ என்று சொல்ல அவருக்கு இருக்கிற கோபத்துக்கு என்ன கத்தியால குத்துவாரே தவிர அவங்க பசங்கள என்னைக்குமே அப்படி பண்ண மாட்டாரு என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
காரில் இனியா அமைதியாக வர என்னாச்சுமா என்று கேட்க தாத்தாவும் பாட்டியும் தான் என்ன காலேஜ்ல விட்டுட்டு வருவாங்க. பாட்டிக்கு கால் வலி இருக்கும் தாத்தாக்கு ஏற்கனவே உடம்பு சரியில்ல ஆனால் அவங்கள நான் ஏன் வரீங்க என்று திட்டி இருக்க, ஆனா இப்போ அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா வந்து என்னை விட மாட்டாங்களான்னு தோணுது என்று அழ கோபி அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார்.
பிறகு பாக்யா ராமமூர்த்தியின் பீரோவில் இருக்கும் துணிகளை செல்வியிடம் நீ எடுத்துக்குறியா செல்வி பாதிக்கு மேல புது துணி தான் இருக்கு என்று சொல்ல, எடுத்துக்கிறேன் அக்கா இதுல என்ன இருக்கு என்று சொல்லுகிறார் செல்வி. நீ எதுவும் தப்பா நினைக்கல என்று சொல்ல அவர் என் அப்பா மாதிரி அப்பாவோட துணியை எடுத்துக்கிட்டு போறதில்ல நான் என்ன நினைப்பேன் என்று சொல்லுகிறார். உடனே ஈஸ்வரி செல்வி எனக்கு அவரோட ஒரு செட்டு மட்டும் கூடுமா அவருடன் ஞாபகமான வச்சிக்கிற என்று வாங்கி வைத்துக் கொள்கிறார். அவரின் பீரோவில் இருந்து டைரி மற்றும் லெட்டர்கள் கிடைக்கிறது. அவர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக லெட்டர் எழுதி வைத்திருப்பதை பார்க்கின்றனர்.
ஈஸ்வரி எல்லாரையும் கூப்பிட்டு அவரு கடவுள் கிட்ட போன பிறகு யாரும் கலங்கி நிற்க கூடாது என்று உயிலும் தனித்தனியாக லெட்டரும் எழுதி வெச்சி இருக்காரு என்று சொல்லிவிட்டு லெட்டரை எல்லோருகிட்டையும் கொடுத்துடு பாக்யா என்று சொல்லுகிறார். செழியனை உயில் படிக்க சொல்ல அவர் நிலத்தை பாக்யா பேரில் எழுதி வைத்திருக்கிறார் அவர் நகை மற்றும் பணம் பேரம் பேத்தி மற்றும் மருமகள்கள், குழந்தைகள் அனைவருக்கும் யார் யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என்பதையும் தெளிவாக எழுதி வைத்துள்ளார். இனியாவின் திருமணத்திற்கு தனியாக காசு சேர்த்துள்ளதாகவும் சொல்ல அனைவரும் கண்கலங்கி அழுகின்றனர்.
ஈஸ்வரி அவருக்கு எழுதிய லெட்டரை பிரித்து படிக்கிறார். நான் ஒரு நிறைவான வாழ்க்கையை தான் வாழ்ந்து இருக்கேன் ஈஸ்வரி, நீ இதுக்கு மேல நம்ம குடும்பத்தை வழி நடத்தி நடக்கிற சந்தோஷத்துக்கு எல்லாம் காரணமா இருக்கணும் பாக்கியாவை நல்லா பாத்துக்கோ என்ன பத்தி கவலைப்படாதே நீ எப்பவுமே சிரிச்சி சந்தோஷமா இருக்கணும் என்று எழுதியிருப்பதை பார்த்து ஈஸ்வரி கதறி அழுகிறார்.
பாக்கியா லெட்டரை படிக்க ஆரம்பிக்க அதில் என்ன எழுதி இருக்கிறார்? யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார்? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.