அமிர்தாவை அசிங்கப்படுத்தி பேச எழில் கோபமாகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி அமிர்தாவை குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு கோபமாக பேசி காயப்படுத்துகிறார். ராமமூர்த்தி பாக்கியா என யார் சொல்வதையும் கேட்காமல் அமிர்தாவை திட்டுகிறார்.
பாக்கியா அமிர்தாவை போக சொல்ல ஈஸ்வரியிடம் பாக்கியா,ராமமூர்த்தி கோபமாக பேசுகின்றன. மறுபக்கம் அமிர்தா ரூமில் அழுது கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து பாக்கியா வந்து ஆறுதல் சொல்ல பாக்கியாவிடம் வருத்தப்பட்டு அமிர்தா அழுகிறார். அமிர்தாவிற்கு தைரியத்தை கொடுத்து ஆறுதலாக பேசி நான் இருக்கிறேன் என்று சொல்கிறார் பாக்யா.
கோவிலில் அமிர்தா ஈஸ்வரி சொல்லியதை நினைத்து அழுது கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து எழில் வருகிறார். எழிலிடம் அம்மா வீட்டுக்கு சென்று கொஞ்ச நாள் இருந்து விட்டு வரேன் என்று சொல்ல, அப்படியெல்லாம் சொல்ல மாட்டியே என்ன பிரச்சனை என்று கேட்கிறார். பாட்டி ஏதாவது சொன்னார்களா என்று கேட்கிறார். வீட்டில் நடந்த விஷயங்களை எழிலிடம் சொல்ல கோபமாக அமிர்தாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். பாக்கியா மற்றும் செல்வி இருவரும் அமிர்தாவை நினைத்து வருத்தப்பட்டு பேசுகின்றன. மறுபக்கம் அமிர்தா எவ்வளவு சொல்லியும் பாட்டியிடம் கேட்கப் போவதாக கோவமாக உள்ளே வருகிறார்.
பாட்டி என்று கோபமாக கூப்பிடுகிறார். ஈஸ்வரி வந்தவுடன் எழில் கேட்டது என்ன? ஈஸ்வரி சொல்லப்போகும் பதில் என்ன? என்று பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.