எழில் அஸ்தியை கரைக்க வில்லத்தனமாக பேசியுள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் எழில் ராமமூர்த்தியின் அஸ்தியை வீட்டுக்கு கொண்டு வர அனைவரும் அழுகின்றனர். பிறகு விளக்கேற்றி அஸ்திக்கு பூஜை செய்யும்போது ஈஸ்வரி கதறி அழுகிறார். இனியா எனக்கு தாத்தாவை இப்பவே பாக்கணும் போல இருக்கு என்று அழ எழில் ஆறுதல் சொல்கிறார். நேத்து வரைக்கும் என் கூட சந்தோஷமா வாழ்ந்தவர இன்னிக்கு சாம்பலா பார்க்கும்போது மனசு பதறுது என்று ஈஸ்வரி அழுகிறார். எழில் அஸ்தியை எடுத்துக்கொண்டு கரைக்க சென்று விடுகிறார்.
பூஜை பண்ணி அஸ்தியை கரைத்த பிறகு எழில் செழியன் இடம் தாத்தா எங்கிட்ட ரொம்ப நேரம் பேசினார் ஆனால் அதுதான் கடைசி பேச்சா இருக்கணும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல ஒரு நாள்ல எல்லாமே முடிஞ்சு போச்சு என்று அழுகிறார். செழியன் எனக்கு முதல்ல குடும்ப பொறுப்பு பத்தி தெரியல தாத்தா சொல்லியும் நான் அத பெருசா எடுத்துக்கல ஆனா எனக்குன்னு ஒரு பிரச்சனை வரும்போதுதான் என் குடும்ப நின்னாங்க என்ற இப்பதான் எனக்கு நான் நல்லா பார்த்துக்கணும் அப்படின்னு தோணுச்சு. என் குடும்பம் இந்த குடும்பத்துக்கு மூத்தவனா நான் நல்லா பாத்துப்பேன் நீ என் தம்பி டா உன்ன நல்லா நான் பாத்துப்பேன் என்று கட்டிப்பிடித்து நான் இருக்கிறேன் டா என்று சொல்லி அழுகிறார்.
பிறகு பழனிச்சாமி மற்றும் ஜோசப் இருவரும் செழியன் மற்றும் எழில்க்கு ஆறுதல் சொல்லுகின்றனர். அவர் எங்கேயும் போக மாட்டாரு உங்க குடும்பத்தோட உங்க கூடவே தான் ஏதாவது ஒரு இடத்துல இருப்பாரு என்று சொல்லி நீங்கதான் பெரியவங்களுக்கு சமாதானம் படுத்தனும் நீங்களே இப்படி அழுது கொண்டே இருந்தால் எப்படி வாங்க போகலாம் என்று கூப்பிட்டு செல்கின்றனர்.
மறுபக்கம் கோபி அஸ்தியை கரைத்து ராதிகாவிடம் நான் என்ன தப்பு பண்ண எவ்வளவு பெரிய தண்டனையை எனக்கு எங்க அப்பா அம்மா கொடுத்தாங்க. பொறந்ததுல இருந்து அவங்களுக்கு புடிச்ச மாதிரி தான் இருந்தேன் வாழ்ந்த, அவர் சொன்ன ஒரே வார்த்தைக்காக எனக்கு புடிக்காத வாழ்க்கையை ஏத்துக்கிட்டு நல்லா தான் எல்லாரையும் பார்த்துக்கிட்டு இருந்தேன் ஆனா இப்போ எனக்கு புடிச்ச வாழ்க்கையை தேர்ந்தெடுத்தது ஒரு பெரிய தப்பா? இதுக்காகவா எனக்கு இந்த தண்டனையை கொடுத்தாங்க என்று ராதிகாவிடம் பேசுகிறார்.
ஈஸ்வரியை பற்றி கோபி சொன்னது என்ன?ராதிகா கொடுத்த பதில் என்ன என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.