எழிலிடம் கோபமாக பேசி வருத்தப்பட வைத்துள்ளார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் படம் விஷயமாக கதை சொல்ல ப்ரொடியூசரை சந்திக்கிறார். அவர் எழிலை அவமானப்படுத்திய அனுப்பி வைக்கிறார். பிறகு வருத்தமாக எழில் நண்பருடன் செல்கிறார்.
மறுபக்கம் வீட்டில் எல்லோரும் சமைக்கும் வேலை பார்த்துக் கொண்டிருக்க இனியா நான் இதை ஹெல்ப் பண்ணட்டுமா என்று கேட்கிறார். ஆனால் செல்வி போனது ரிப்பேரா இல்லை சார்ஜ் இல்லையா என்று கேட்டு கிண்டல் செய்கிறார். அமிர்தாவும் உனக்கு ஏதாச்சும் வேணுமா அதுக்கு தான் இப்படி பண்றியா என்று கேட்கிறார். ஆனால் இனியா எனக்கு எதுவும் வேண்டாம் என்று பாக்யாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். பிறகு ஜெனி நான் சமைக்க கற்றுத் தரவா என்று கேட்க அனைவரும் ஷாக்காகி பார்க்கின்றன.
பிறகு அமிர்தா எல்லோரையும் சாப்பிட கூப்பிட ராமமூர்த்தி எல்லோரும் வந்தவுடன் ஒண்ணாக சாப்பிடலாம் என்று சொல்ல செழியன் வருகிறார், செயல் பாக்யாவிடம் பணம் எடுத்து வீட்டு செலவுக்காக கொடுக்க பாக்கியா வாங்க மறுக்கிறார், எல்லோரும் வற்புறுத்தி வாங்க சொல்ல அந்த நேரம் பார்த்து வாசலில் வந்து எழில் நின்று அதை பார்த்து வருத்தப்படுகிறார்.
எழில் நிக்க வைத்து ஈஸ்வரி என்ன பேசினார்? அதற்கு எழில் எடுத்த முடிவு என்ன என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்