எழில் வருத்தத்தில் இருக்க கோபி வில்லத்தனமாக பேசியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல்.இன்றைய எபிசோடில் பழனிச்சாமியிடம் நடந்ததை சொல்லி வருத்தபட பழனிச்சாமி ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார்.
மறுபக்கம் எழில் சோகமாக வர ராமமூர்த்தி ஆறுதல் சொல்லுகிறார். பிறகு ஈஸ்வரி எழிலிடம் கனவு காண்பது எல்லோருக்கும் உண்டு. அதற்கான முயற்சியும் எடுக்கலாம். அது நடக்காத போது எல்லாத்தையும் மூட்டை கட்டி எடுத்து வச்சிட்டு வேற வேலைக்கு போகுமாறு ஈஸ்வரி கூறுகிறார். குழந்தையை பெத்துக்கிட்டு லைப்ல செட்டில் ஆகுற வழிய பாரு. என்றெல்லாம் பேச எழில் கோபமாக எழந்து சென்று விடுகிறார்.
ராமமூர்த்தி ஏன் இப்படி பேசினேன் என்று கேட்க நான் பேசினதை எல்லாம் நீங்க பேசி இருக்கணும் என்று கோவமாக சொல்லிவிட்டு எழுந்து செல்கிறார்.
எழிலுக்கு ஆறுதல் சொல்ல அமிர்தா வருகிறார். எழில் அமிர்தாவிடம் எனக்கு திறமை இருக்கு நான் நம்புறேன். என்னால படம் பண்ண முடியும் என்று நம்புகிறேன். என்னை தவிர வேறு யாரும் நம்ப மாற்றங்க என வருத்தப்பட்டு பேசுகிறார். பிறகு அமிர்தா குழந்தை பெத்துக்கலாம் என்று சொல்ல அவரை சமாதானம் படுத்தி பேசுகிறார் எழில்.
மறுபக்கம் பாரில் கோபி மற்றும் செந்தில் குடித்துக் கொண்டிருக்க செந்திலின் நண்பரை சந்திக்கின்றன. அவர் பாக்கியா ரெஸ்டாரன்ட் ஓனர் என கோபிக்கு தெரிய வருகிறது.
உண்மை தெரிந்த கோபி என்ன செய்யப் போகிறார்? பாக்யாவுக்கு எதிராக கோபி போட்ட திட்டம் என்ன? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்