பாக்கியாவிடம் சிக்கியுள்ளார் இனியா.
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனியா பாக்யாவிற்கு அழுது கொண்டே உங்க எல்லாரையும் விட்டுட்டு போறேன் என்று எழுதி லெட்டரை எடுத்துக்கொண்டு போய் வைக்கும் நேரத்தில் பாட்டில் கீழே விழுந்து பாக்யா எழுந்து விடுகிறார். பிறகு பாக்யாவை சமாளிக்க முயற்சி செய்ய கையில் இருக்கும் லெட்டரை பாக்யா பார்த்து படித்து விட்டு ஷாக்காகி அழ ஜெனி சத்தம் கேட்டு வந்து விடுகிறார்.
நான் செத்துப் போவதாக சொல்லி ஜெனியிடம் அழுகிறார், ஜெனி முதலில் கோபப்பட பிறகு இனியாவிற்கு ஆறுதல் கூறுகிறார்.
நீ இல்லனா நா இல்லை இனியா, நீ இல்லைனா நான் செத்துப் போய் விடுவேன் என்று பாக்யா கதறி அழ இனியா இனிமேல் இப்படி செய்யமாட்டேன்மா சாரி என்று மன்னிப்பு கேட்கிறார். ஜெனி பாக்யாவை சமாதானப்படுத்த நான் எழுந்துக்கலேனா என்ன நடந்திருக்கும் என்று கவலைப்பட்டு அழுகிறார். பாக்யாவிற்கு ஆறுதல் கூறி பிறகு இனியாவே லெட்டரை கிழித்து போட சொல்லுகிறார் ஜெனி.
ஜெனி பாக்கியா விடும் இனிமேல் எந்த தவறும் செய்ய மாட்டேன் என சக்தியை செய்து கொடு என்று சொல்ல தஇனியாவும் சத்தியம் செய்கிறார். ஜெனி பாக்கியவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்ப மறுபக்கம் பாக்கியா இனியாவை நினைத்து தூங்காமல் இருக்கிறார்.
ஈஸ்வரியிடம் நடந்ததை சொல்லி அழ பாக்கியா எடுத்த முடிவு என்ன? அதற்கு ஈஸ்வரி கொடுத்த பதில் என்ன என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.